Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 01 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
Usw atte Confectionery Works, மிலானியவில் உள்ள தனது வளாகத்தில் புதிய பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளது. இந்த நவீன தொழிற்சாலை, பிரத்தியேகமாக பிஸ்கட் உற்பத்தியில் கவனம் செலுத்தவுள்ளதுடன், இலங்கையில் பிஸ்கட் சந்தையில் Usw atte நிறுவனம் காலடியெடுத்து வைப்பதன் அடையாளமாகவும் மாறியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அடங்கலாக பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.
இலங்கை நுகர்வோருக்கு அதிசிறந்த தரத்திலான பிஸ்கட் உற்பத்தியைத் தயாரித்து வழங்க வேண்டும் என நிறுவனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் பணிப்பாளர் சபைத் தலைவருமான காலஞ்சென்ற பீ.ஜே.சீ. பெரேரா (கிறிஸ்டி) அவர்களின் நீண்ட காலக் கனவு தற்போது உஸ்வத்த பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்துள்ளதன் மூலமாக நனவாகியுள்ளது.
தற்போதைய பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான எஸ். குயின்டஸ் பெரேராவின் வலுவான தலைமைத்துவத்தின் கீழ் நீண்ட கால, தெளிவான திட்டமிடல் மற்றும் தயார்படுத்தல் செயற்பாடுகள் பிஸ்கட் சந்தையில், நிறுவனம் வர்த்தக ரீதியாகக் காலடியெடுத்து வைப்பதற்கு இடமளித்துள்ளன.
உயர்தர பிஸ்கட் உற்பத்திகளை வழங்கும் முகமாக, பிஸ்கட் உற்பத்தி தொடர்பாகக் கிடைக்கப்பெறுகின்ற மிகச் சிறந்த இயந்திரத்தொகுதிகளை நிறுவனம் இறக்குமதி செய்துள்ளதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் சேவையையும் அது உபயோகிக்கின்றது.
பிஸ்கட் உற்பத்தி சார்பில் கிடைக்கப்பெறுகின்ற அதிநவீன லமினேட்டர் (laminator) இயந்திரம் இத்தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகின்றது. வலய வெப்பநிலை மற்றும் மேல், கீழ் மட்ட வெப்பநிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற அதிநவீன baking oven இத்தொழிற்சாலை கொண்டுள்ளதுடன், முழுமையாக தன்னியக்கமயமாக்கப்பட்ட burner-by-burner எப்போதும் சம அளவில் வெதுப்பு செய்யப்பட்ட பிஸ்கட்டை உற்பத்தி செய்வதற்கு இடமளிக்கின்றது.
ஐக்கிய இராச்சியம், சுவிட்சலாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகின்ற உலகின் மிகச் சிறந்த சுவைக்கலவை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற அதிசிறந்த தரத்திலான மூலப்பொருட்கள், மற்றும் சுவைக்கலவைகளை கொண்டு சர்வதேச தராதரங்களுக்கு அமைவாக, மிகவும் சுகாதார ரீதியாக உஸ்வத்த பிஸ்கட் உற்பத்திகள் அனைத்தும் தயாரிக்கப்படுகின்றன.
11 minute ago
44 minute ago
49 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
49 minute ago
21 Jul 2025