2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எதிர்வரும் 15ஆம் திகதி உலக பாவனையாளர் தினம்

Gavitha   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

மார்ச் 15ஆம் திகதி உலக பாவனையாளர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், கழிவு மற்றும் மலிவு விற்பனைகள், சில வர்த்தக நிலையங்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படவுள்ளது. கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்
ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரட்ண தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற  ஊடகவியலாளர் மாநாடொன்றில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாவனையாளர்களுக்கும் வர்த்தக உரிமையாளர்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் முகமாக, மார்ச் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி  பொருட்களுக்கான கழிவு மற்றும் மலிவு விற்பனைகளை, சில வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். அவ்வாறான நிறுவனங்களாக ச.தொ.ச,
தனியார் வைத்தியசாலைகளின் சங்கங்களில் உள்ள சில 22 வைத்திய நிலையங்கள், நாலந்தா அப்பியாசக் கொப்பி பிரைவட்  லிமிடெட், சம்பத் வங்கி ஆகியன அதனது உத்தியோக பூர்வமான அறிவிப்பை வழங்கியுள்ளன.

இம்முறை நுகர்வோருக்கான விற்பனை வாரத்தை 'பாவனையாளருக்கு மகுடம்' என்னும் தலைப்பில் கொண்டாடவுள்ளதாகவும் இத்தினத்தை முன்னிட்டு ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் என்பனவும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் கட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இச்செயற்பாட்டின் மூலம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு எவ்வித இலாப நோக்கமும் இல்லை  என்றும் இதனால் நுகர்வோருக்கே பெருமளவு சாதகம் என்றும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X