Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமக் கம்பனிகளின் துணை நிறுவனமான மேன்ஸ் லங்கா (பிரைடிவட்) லிமிட்டட், கொட்ரிஜ் பூட்டு சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைமைகள், பஜாஜ் மின்விசிறிகள் ஆகியவற்றை இலங்கையில் விநியோகிப்பதுக்கான ஏக முகவராக நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பஜாஜ் மின்விசிறிகள் மற்றும் கொட்ரிஜ் பூட்டு முறைமைகளுக்கான புதியதொரு வளர்ச்சிக் கட்டத்தை இது எடுத்துக் காட்டுகின்றது.
'கொட்ரிஜ் பூட்டு சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைமைகள், பஜாஜ் மின்விசிறிகள் ஆகியவற்றுடன் இலங்கையில் பங்காளியாக இணைந்துக் கொள்வதையிட்டு நாம் மிக மகிழ்ச்சியடைகின்றோம்' என்று மெக்சன்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சிம்மர் மில்பர் தெரிவித்தார்.
'இப்புதிய பங்காளித்துவமானது இரு நிறுவனங்களுக்கும் பெருமளவான புதிய வாய்ப்புக்கள் கிடைப்பதைக் கட்டியம் கூறுவதாகக் காணப்படுகின்றது என்று நாம் நம்புகின்றோம். அத்துடன், இப்போது இலங்கையின் பாரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தை அடைவதுக்கான வருங்கால வாய்ப்பு தொடர்பில் ஊக்கமடைந்துள்ளோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொட்ரிஜ் பூட்டுத் தீர்வுகள் மற்றும் முறைமைகள் (Godrej Locking Solutions and Systems) என்பது, பூட்டுதல் தொடர்பான புத்தாக்கச் சாதனங்களை உற்பத்தி செய்வதில் 119 வருடங்கள் பழமைவாய்ந்த முன்னணி இந்திய நிறுவனமாகும். இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு, நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் நேர்மை ஆகியவறுக்கு பெயர்போன ஒன்றாக அதன் நாமம் திகழ்கின்றது. கோட்ரேஜ் பூட்டுத் தீர்வுகள் மற்றும் முறைமைகள் ஆனது சர்வதேச தராதர விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதுடன், ISO 9001, ISO 14001 மற்றும் OHSAS 18001 சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.
3 minute ago
8 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
35 minute ago