2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஐரோப்பிய சந்தையில் லங்காசோய்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் லங்காசோய் வர்த்தகத்தின் கீழ் சோயா புரத உற்பத்திகளின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலில் முன்னோடியும், சந்தையின் முதலிடமும் வகிக்கும் Convenience Foods (Lanka) PLC, சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் வெற்றிகரமாக பிரவேசித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் முதன்மையான உணவு உற்பத்தி நிறுவனமான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்டின் (சிபிஎல்) துணை நிறுவனமாக இருப்பதால், Convenience Foods ஆனது நெதர்லாந்துக்கு உணவுப்பொருளை விநியோகிக்கும் நோக்கில் சமீபத்தில் முன்னணி டச்சு விற்பனை நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது.  

Convenience Foods ஆனது லங்காசோய் வர்த்தக நாமத்தின் கீழ், புதுமையான, உயர்தர சோயா புரதத் (டிஎஸ்பி) தயாரிப்புகளை வழங்குகிறது. இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சோயா நகெட்ஸ்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் லங்காசோய், உணவு சந்தைக்கு சோயா சுவையிலான வியத்தகு உணவு வகைகளை வடிவமைத்து அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை சைவ, அசைவ உணவுப்பிரியர்களுக்கு வழங்குவதில் பெரும் கருவியாகவும் உள்ளது.

இதையொட்டி லங்காசோயானது, உள்நாட்டுச் சந்தையில் நுழைவதற்கு காலத்துக்கேற்ற உத்திகளைக் கையாளுவதுடன், பல புதிய உற்பத்திகளை ஊக்கப்படுத்தும் உற்பத்தியாளனாகவும் இனங்காணப்படுகின்றது. உற்பத்திகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கண்டுபிடிப்புகளை உயர்த்துதல் மூலம் லங்காசோய் அதன் நுகர்வோர் சுவைக்கு பொருந்தக்கூடிய வடிவங்கள் மற்றும் புரட்சிகர விவேகமான சுவாரஸ்யங்களை வழங்கியுள்ளது.

மேலும், பல ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகள் இரண்டிலும் அதன் வெற்றிச் சுவ​டைப் பதித்த வர்த்தக நாமமாக விளங்கி வருகிறது.

தற்பொழுது, லங்காசோய் தயாரிப்புகள் மத்திய கிழக்கிலும் மாலைதீவு சந்தைகளிலும் புகழ் பரப்பி வருகின்றன, இது லங்காசோய்க்கு ஐரோப்பிய சந்தையில் மற்றுமொரு சாதனையாக விளங்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .