2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஒக்டோபரில் ‘போட்டோமரதன்’ 2018

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

போட்டோமரதன் ஸ்ரீ லங்கா 2018க்கான பதிவுகளை ஏற்றுக்கொள்ளும் பணிகள், தற்போது ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. உடனடியாக எடுக்கப்படும் சிறந்த புகைப்படத்தின் புகைப்படக் கலைஞருக்கு, பிராந்திய மட்டத்தில், ஜப்பானில் ஏற்பாடு செய்யப்படும் போட்டோமரதன் ஆசியா சம்பியன்ஷிப் 2019இல் போட்டியிடக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும்.

நூற்றுக்கணக்கான புகைப்பட ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்கள் போன்றோர், ஒவ்வொரு ஆண்டும் இந்த பெருமைக்குரிய போட்டியில் போட்டியிடுவதுடன், ஜப்பானில் இடம்பெறும் போட்டோமரதன் ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

மெட்ரோபொலிடன் போட்டோஹப் பிரைவட் லிமிட்டெடினால், இந்த போட்டோமரதன் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கைச் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின்  அங்கிகாரமும், இதற்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு நிகழ்வு, ஒக்டோபர் 21ஆம் திகதி, கலதாரி ஹோட்டலில், மு.ப 8 மணி முதல் இடம்பெறும்.  கடந்த ஆண்டுக்கான நிகழ்வில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரயாணிகளும் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், திறந்த மற்றும் மாணவர்கள் 
சுற்றுகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .