Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 27 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒமெகா லைன், சந்தலங்காவ, மூன்று மில்லியனுக்கும் அதிகமானத் தொகையைக் கொண்டு “சஹானோதயட தவசக” எனும் தொனிப்பொருளில் மாபெரும் சமூகப்பொறுப்புணர்வுச் செயற்றிட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
ஒரு நாளில் நிறுவனம், மேல் மற்றும் வட மேல் மாகாணங்களைச் சேர்ந்த 34 சிறுவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு, அங்கு தங்கியிருப்போரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளையும் அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை, ஒமெகா லைன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஃபீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ முன்னெடுத்திருந்தார். இந்தத் திட்டத்துக்காக 24 சிறுவர்கள் இல்லங்களையும், 10 முதியோர் இல்லங்களையும் நிறுவனம் இனங்கண்டிருந்தது.
சந்தலங்காவயிலிருந்து 50 கிலோமீற்றர் தூரத்திற்கு காணப்படும் இந்த இல்லங்கள், திட்டத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக அப்பகுதிகளின் தேவைகள் முன்கூட்டியே கணிப்பிடப்பட்டிருந்தது. ஒமெகா லைன் ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து இந்த ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
தெரிவு செய்யப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களின் நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம், உலர் உணவுப்பொருட்கள், இனிப்புப்பண்டங்கள், ஆடைகள், சிறுவர் ஆடைகள், சீருடைகள், படுக்கை விரிப்புகள், பாடசாலை உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், நீர் வடிகட்டிகள், குளிர்சாதனப்பெட்டிகள், சலவை இயந்திரங்கள், நுளம்பு வலைகள், மின்குமிழ்கள், சேவியட் வகைகள், மெத்தைகள், பாதணிகள், வாசிப்புப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், இரும்பு அலுமாரிகள், தூய்மைப்படுத்தும் மூலப்பொருட்க்ள், அடுப்புகள் மற்றும் நிதி உதவிகள் போன்றன ஒமெகா லைன் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, ஒமெகா லைன் ஊழியர்கள், இந்த வளாகங்களுக்குப் புதிதாக வர்ணம் தீட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர். அவர்களின் இல்லங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களின் ஆடைகளைக் கழுவும் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தனர். அவர்களின் தீவிர ஈடுபாடு இதன் போது பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஒமெகா லைன் ஊழியர்களில் 2,500 பேர் சுமார் 34 அணிகளாகப் பிரிந்து, இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குறித்த இல்லங்களைச் சேர்ந்தவர்களுடன் தமது பொழுதுகளைச் செலவிட்டிருந்தனர். தமது சொந்தப் பணத்தைக்கொண்டு அவர்களுக்குரிய அன்பளிப்புகளைக் கொள்வனவு செய்திருந்தனர். ஒமெகா லைன் நிறுவனத்தினால் குறித்த இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கான மதிய உணவு மற்றும் தேநீர் போன்றன வழங்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .