Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 16 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் “ஒலிவ்” நீர் பம்பிகள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் 25 வருட காலமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள Agrotac குழுமத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டின் அடிப்படையில் இந்தப் பம்பி உற்பத்திச் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் சாதனங்கள் வடிவமைப்பாளராக இந்நிறுவனம் திகழ்கிறது.
நீர் விநியோகத்தில், விசேட நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் எனும் வகையில், Agrotac இலங்கையில், வாழ்க்கைக்கு நீர் வலுவைச் சேர்த்தல் எனும் நோக்கத்துக்கு அமைய தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச தரங்களுக்கு நிகரான தனது பொறியியல் நிபுணத்துவத்தினூடாக, பங்களிப்பை வழங்கி வருகிறது. வியாபாரம் அல்லது இல்லத்தின் சுமூகமான செயற்பாட்டுக்கு, அத்தியாவசியமான உட்கட்டமைப்பாக நீர் பம்பி அமைந்துள்ளது. இருந்த போதிலும், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தரம், வடிவமைப்பு மற்றும் வினைத்திறன் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன.
இதுவரையில் Agrotac உயர் தரத்தைப் பெற்றுக்கொடுப்பது பற்றியும், ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட வடிவமைப்புகளையும் நீர் பம்பியில் பெற்றுக்கொடுப்பதிலும் கவனம் செலுத்தி வந்திருந்து. ஏனைய நிறுவனங்கள் Agrotac நிறுவனத்தின் நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளைப் பயன்படுத்தி தமது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன.
இதற்கு Agrotac இன் தொழில்நுட்ப சிறப்பு மற்றும் தொடர்ச்சியான மேம்படுத்தல்கள் போன்றன காரணமாக அமைந்திருந்தன. இதன் ஒப்பற்ற தயாரிப்பு சிறப்பு என்பது, உள்நாட்டு பின்பற்றல்கள் மற்றும் மாற்றியமைத்தல்கள் ஆகியவற்றினூடாக தயாரிப்பு சிறப்பு எய்தப்படுகிறது. Agrotac தற்போது சந்தையில் தனது சொந்த வர்த்தக நாமத்துடன் பிரவேசித்துள்ளது. “ஒலிவ்” என்பது தொழில்நுட்ப மேம்படுத்தல்களைக் கொண்டமைந்துள்ளமையால், சந்தை விலையை விட 30 சதவீதம் குறைந்த விலையில் காணப்படுகிறது.
தரத்தில் உயர்ந்த நிலையில் காணப்படுவதால், சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு குறுகியக் காலப்பகுதியில் 20சதவீதத்துக்கும் அதிகமான சந்தை வாய்ப்பை தன்வசப்படுத்தியுள்ளது. மூன்று பிரிவுகளில் ஒலிவ் நீர் பம்பிகள் வழங்கப்படுகின்றன. உள்ளக, தொழிற்துறை மற்றும் விவசாயப் பயன்பாடுகளுக்கு இது உபயோகிக்கப்படுகிறது. நிறுவனத்தின் சாதனங்கள் உற்பத்தியாளரின் நிபுணத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .