Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் நிறுவனம் (CLC) தனது இஸ்லாமிய நிதிச்சேவை பிரிவை, மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் ஆரம்பித்துள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிலையம் ஊடாக இஜாராஹ் (குத்தகை), முராபஹா (வர்த்தக நிதி), டிமினிஷிங் முஷாரகா (சொத்து மற்றும் செயற்பாட்டு மூலதனம்) மற்றும் வக்காலா (வியாபார மற்றும் செயற்பாட்டு மூலதனம்) போன்ற இஸ்லாமிய நிதிச் சேவைகள், தமது வாடிக்கையாளர்கள் திருப்பியடையும் விதத்தில் முழுமையாக வழங்கப்படவுள்ளன.
CLC இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு வழங்கும் இஸ்லாமிய நிதித் தீர்வுகளாவன உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற மூன்று இஸ்லாமிய அறிஞர்களின் அங்கத்துவத்தைக் கொண்ட ஷரீஆ கண்காணிப்புச் சபை மூலம் அங்கிகரிக்கப்பட்டவையாகும்.
இஸ்லாமிய நிதிச் சேவைத் துறையில் முன்னேறிவரும் ஒரு நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுள்ள CLC இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவானது, இஸ்லாமிய நிதித் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளைக் கடைபிடிக்கும் ஒரு நிறுவனமாகப் புகழ் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஓட்டமாவடியில் ஆரம்பிக்கப்பட்ட இக்கிளை தவிர, கிழக்கில் அக்கரைப்பற்று, கிண்ணியா மற்றும் மூதூரிலும் CLC இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவுகள் இயங்கிய வண்ணமுள்ளன.
LOLC குழுமத்தின் ஒரு முக்கிய அங்கத்துவ நிறுவனம் என்ற ரீதியில் CLC இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு தேசத்தின் நிதி அபிவிருத்திக்கு ஒரு பிரதானமான அங்கமாகத் திகழ்கின்றது.
29 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago