Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் ARPICO சுபர் சென்டர்கள் மற்றும் ARPICO தினசரி சுபர் மார்க்கெட் என்பனவற்றில் ஒரே தினத்தில் 9000 த்திற்கும் அதிகமான சிறுவர்கள் குவிந்தனர். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை ஜாம்பவான்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓவியப் போட்டியில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவே இவர்கள் இங்கு வருகை தந்திருந்தனர்.
இந்த தீவிரமான போட்டிப் பங்களிப்பானது ஒவ்வொரு ARPICO நிலையத்திலும் சராசரியாக 250 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கூடுவதற்கு வழிவகுத்ததாக கம்பனி அறிவித்துள்ளது. 17 ARPICO சுபர் சென்டர்களிலும் 21 ARPICO தினசரி சுபர் மார்க்கெட்டுகளிலும் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இத்தகைய போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு 12 வயதிற்கு குறைவான சிறுவர்களுக்கு அவர்கள் தங்களது குடும்பத்தோடு கழித்த ஒரு மறக்க முடியாத நிகழ்வை ஓவியமாக வரைய வேண்டும் என்ற இலக்கு வழங்கப்பட்டது. 'எமது வாடிக்கையாளர்களின் அளவுக்கதிகமான பங்களிப்பு எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.' என்று கூறினார் வரையறுக்கப்பட்ட ரிச்சட் பீரிஸ் விநியோக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவிற்குத் பொறுப்பான விநோத் டி சில்வா. ஆக்கபூர்வமான திறமைகள் கொண்ட சிறுவர்களாலும் அவர்களது பெற்றோர்களாலும் எமது விற்பனை நிலையங்கள் நிரம்பி வழிந்தன. எமது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் இத்தகைய அனுபவங்களை வழங்குவதில் நாம் எப்போதும் ஆர்வம் கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்திய சகல சிறுவர்களுக்கும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. சிறந்த மூன்று இடங்களை பெற்றுக் கொள்ளும் சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன. பிரபல தனியார் பராமரிப்பு உற்பத்தியாளர்களான பேபி ஷெரமி மற்றும் லிட்டில் பிரின்ஸஸ் என்பன இம்முறை ARPICO வோடு இணைந்து இதற்கான ஆதரவை வழங்கியிருந்தன.
ARPICO சங்கிலித் தொடர் வர்த்தக நிலையமானது தற்போது 17 சுபர் சென்டர்கள் மற்றும் 19 காட்சியறைகள், மற்றும் 21 தினசரி மினி சுபர் மார்க்கெட்கள் என்பனவற்றைக் கொண்டதாகும். போதிய வாகன தரிப்பிட வசதி, பட்டியல்கள் கொடுப்பனவு, வங்கி வசதிகள், வாழ்வியல் தேவைகள், வீட்டு பாவனைப் பொருள்கள், இலத்திரனியல் உபகரணங்கள், சமையலறை பொருள்கள், தளபாடங்கள், என்பன உட்பட விரிவான பல்வேறு வகை உற்பத்திகளை ARPICO நிலையங்களில் மிகவும் சௌகரியமான முறையில் பெற்றுக் கொள்ளலாம்
சிறுவர்கள் சிலர் ஓவியப் போட்டியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.
43 minute ago
48 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
4 hours ago
6 hours ago