2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடவத்தையில் செலிங்கோ லைஃப் புதிய அலுவலகம்

Editorial   / 2018 மே 22 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃப் சுற்றாடலுக்கு சிநேகமான அதன் புதிய கிளையை கடவத்தையில் தனது சொந்தக் காணியில் திறந்து வைத்துள்ளது. கம்பனியின் பசுமை நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக இந்தக் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது.  

இலக்கம் 15A ஜய மாவத்தை கடவத்தை என்ற முகவரியில் இந்தப் புதிய கிளை அமைந்துள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் 6,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. நான்காவது மாடி ஒன்றை எழுப்புவதற்கான விஸ்தீரண வசதியையும் இது கொண்டுள்ளது என கம்பனி அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 50 பேருக்கு பயிற்சிகள் வழங்கக் கூடிய வசதி, போதிய வாகனத் தரிப்பிட வசதி என்பனவும் இங்கு உள்ளன. 2017 ஜனவரியில் இதற்கான அடிக்கல் நடப்பட்டது.   

இயற்கை ஒளியை போதிய அளவில் பாவிக்கக் கூடியதாக இந்தப் பசுமைக் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20KW மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட முழுமையான சூரிய சக்தி வசதி இங்கு உள்ளது. அதேபோல் குழாய் வழி விநியோக நீரின் பாவனையும் குறைக்கப்பட்டுள்ளது.

அதி நவீன சக்தி வள ஆற்றல் கொண்ட மின்சார விளக்குகள், குளிரூட்டிகள் என்பன இங்கு நிறுவப்பட்டுள்ளன. மழை நீர் சேமிப்புக்கான வசதிகள், கழிவு நீர் மீள் சுழற்சி வசதி என்பனவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கட்டட நிர்மாணத்தின் போது, மரப் பாவனையும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகக் கம்பனி அறிவித்துள்ளது.  

கடவத்தை பசுமை அலுவலகம் திறக்கப்பட்டமை பற்றி கருத்து வெளியிட்ட செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் “செலிங்கோ லைஃப் அண்மையில் அதன் 30ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. நாங்கள் பத்து இலட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் காக்கும் வர்த்தகத்தில் இணைந்திருப்பது மட்டுமன்றி, நிலைபேறு தன்மை கொண்ட விதத்தில் அதைச் செயற்படுத்தி வருகின்றோம்” என்று கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .