2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

களனி கேபல்ஸ் பிஎல்சி 50 வருட பூர்த்தி

Editorial   / 2019 மார்ச் 04 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபல்ஸ் பிஎல்சி, தனது 50 வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதனைக் குறிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.   

களனி கேபல்ஸ் நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்ட ங்களில் அதன் தலைவர் உபாலி மதநாயக்க,  திருமதி மதநாயக்க, பதில் தலைவர் சுரேன் மதநாயக்க, அவரின் வாழ்க்கைத் துணை, களனி கேபல்ஸ் பணிப்பாளர்கள், களனி கேபல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, திருமதி சரணபால, முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளரான ஹேமந்த பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.   

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், களனி கேபல்ஸ் நிறுவனத் தலைவர் உபாலி மதநாயக்க ‘நா’ மரக்கன்று ஒன்றை நாட்டியிருந்ததுடன், நினைவுச்சுவடு ஒன்றையும் நிறுவன வளாகத்தில் திறந்து வைத்தார். இலங்கையின் பொருளாதாரத்துக்கு களனி கேபல்ஸ் ஊடாகப் பங்களிப்பு வழங்குகின்றமைக்காக களனி கேபல்ஸ் நிறுவனத் தலைவர் உபாலி மதநாயக்கவுக்கு நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால அன்பளிப்பு ஒன்றையும் வழங்கினார்.   

நிறுவனத்தின் முதல் ஊழியரும், தற்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவரும் ஏற்கெனவே பணியாற்றிய பழைய ஊழியர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், நிறுவனத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைக்காக கௌரவிக்கப்பட்டனர். மேலும், நிறுவனத்தில் தற்போது 20 வருடங்களுக்கு மேலாகச் சேவையாற்றி வரும் ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.   

நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரிகளுடன் அனைத்து ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், நாட்டின் புகழ்பெற்ற இசைக் குழுவினரின் கச்சேரியும் இடம்பெற்றது.   

மத குருமார் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு, நிறுவனத்துக்கும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் ஆசி வேண்டி, இறை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து பிரித் ஓதும் நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வில் பங்கேற்ற பௌத்த துறவிகளுக்கு நிறுவனத்தின் நிர்வாகிகள்,  ஊழியர்கள் தானம் வழங்கியிருந்தனர்.   

50 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் இரத்த தான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .