Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 09 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கேபல்ஸ் பிஎல்சியின் சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான களனி சவிய திட்டத்தின் 10ஆவது தொகுதியினருக்கு கற்கை பூர்த்தியின் பின்னர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சான்றிதழ்களை, களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் பி. திசாநாயக்க ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வு களனி கிளாரியன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது களனி சவிய கற்கையைப் பூர்த்தி செய்த 40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் களனி கேபல்ஸ் பிஎல்சி சார்பாக விற்பனை பொது முகாமையாளர் அனில் முனசிங்க, செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் உபுல் மஹாநாம, வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க, விற்பனை பதில் பொது முகாமையாளர் தேவிந்த லொரென்சுஹேவா, விற்பனை கட்டுப்பாட்டாளர் ரால்ஃவ் ரொஷான், வலு விற்பனை முகாமையாளர் ரோஹண வாத்துவகே மற்றும் செயற்திட்ட வியாபார முகாமையாளர் சுரங்க பதிரன ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சார்பாக பேராசிரியர் மஞ்சுள பெர்னான்டோ, பேராசிரியர் கெமுனு ஹேரத், கலாநிதி சரத் சிசிர குமார (கற்கை பணிப்பாளர், களனி சவிய) மற்றும் ஒழுங்கிணைப்பாளர் ஜயந்தி விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பி.ஏக்கநாயக்க ன் சிந்தனை வெளிப்பாடாக களனி சவிய அமைந்துள்ளதுடன், ஒரு வருட கால இலத்திரனியல் பயிற்சி திட்டம், தனியார் நிறுவனமொன்றுடன் உள்நாட்டு பல்கலைக்கழகமொன்று கைகோர்த்து முன்னெடுக்கும் இலங்கையின் முதலாவது சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக அமைந்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago