Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 17 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி சூழல் விருதுகள் 2016இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி, பிரிவு 2இல் சிறந்த சூழல் பாதுகாப்பான அறிக்கையிடலுக்காகத் தங்க விருதை வென்றிருந்தது. இரும்பு மற்றும் கனிமம் பதப்படுத்தல் துறை பிரிவில் வெண்கல விருதையும் தனதாக்கியிருந்தது.
இந்த விருது வழங்கும் நிகழ்வை, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சு, மத்திய சூழல் அதிகார சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பிரதானத்துவத்துடன் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுடன் பாடசாலைகளும் இந்நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வின் போது இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் களனி கேபிள்ஸ் பிஎல்சி மட்டுமே கௌரவிப்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களனி கேபிள்ஸ் பிஎல்சி பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி விருதுகள் 2016இல் தங்க விருதை வென்றமையானது, களனி கேபிள்ஸ் நிறுவனம் நாட்டினதும், அதன் மக்கள் மீதும் காண்பிக்கும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு, கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றார்.
“களனி கேபிள்ஸ் நிறுவனம், 2010ஆம் ஆண்டில், நிறுவனத்தின் நிலைபேறான அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், மீளமைப்பு செய்யப்பட்டிருந்தது. குறுகிய காலப்பகுதியில், பெருமளவு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிறுவனம் எனும் வகையில், நாம் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.
வளங்கள் விரயம் மற்றும் மூலப்பொருட்கள் விரயம் ஆகியன மிகவும் குறைந்த மட்டத்தில் பேணப்படுகின்றன. களனி கேபிள்ஸ் பிஎல்சி என்பது சூழல் மட்டத்தில் பொறுப்பு வாய்ந்த நிறுவனமாகும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பானப் பயிற்சிகளைத் தனது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் ஒர் அங்கமாக முன்னெடுத்து வருகிறது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .