Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரோக்கியமான வாழ்க்கைக்காக சிறந்த சுகாதார பழக்கங்களை தமது ஊழியர்கள் குழாம் மத்தியில் மேம்படுத்துவதற்காக ‘சுவ சக்தி’ செயற்திட்டத்தை கிறிஸ்ப்றோ குழுமம் ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் 17 பகுதிகளிலுள்ள கிறிஸ்ப்றோ வியாபார இடங்களிலுள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக இத்திட்டம் செயற்படுத்தப்படும். இதற்காக குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் சுகாதார அலுவலகங்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
‘சுவ சக்தி’ சமூக நலன்புரி மற்றும் ஊழியர் நலன்புரி செயற்திட்டத்தின் கீழ் ஆரம்ப மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக, அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த செயற்திட்டங்களில் சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தும் விரிவுரைகள் வழங்கப்படும்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்கள் கிறிஸ்ப்றோ குழுமத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாதங்களாக அறிவிக்கப்பட்டன. அதன் தொனிப்பொருளுக்கு அமைய இந்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய கண் பரிசோதனை செய்தல், இரத்த பரிசோதனை, சிறு நீரக பரிசோதனை, மகளிர் நோய் பரிசோதனை உள்ளி;ட பல பரிசோதனைகள் இடம்பெற்றன.
மேலும் இந்த ‘சுவசக்தி’ செயற்திட்டத்தின் கீழ் கிராமிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை மீள் புனரமைப்பு செய்தல், மகப்பேற்று மற்றும் சிறுவர் சிகிச்சைகள் போன்ற செயற்திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்றிட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளரான கிறிஸ்ப்றோ குழும வியாபாரத்தின் மனித வள மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி கருத்து தெரிவிக்கையில், “சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் ஊடாக ஊழியர்களது உற்பத்தி செயற்திறன் அதிகரிக்கும். அவர்களது குடும்ப உறுப்பினர்களது சுகாதார பழக்கங்கள் மேம்படுவதால் அதுவும் ஊழியர்களது செயற்திறன் அதிகரிக்க காரணமாக அமையும். இதன்மூலம் சமூகத்திற்கே நன்மை” என குறிப்பிட்டார்.
27 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago