2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிளாரியன் இன்டர்நஷனலால் வலுப் பாதுகாப்புப் பயிற்சிப் பட்டறை

Editorial   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்த காலமாக சூழலுக்கு நட்பான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கும் கிளாரியன் இன்டர்நஷனல் லிமிட்டெட் (வர்த்தக நாமம் கிளாரியன் எனர்ஜி),  பல பில்லியன் ரூபாய்களை சேமித்துக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.  

உலகளாவிய ரீதியில் 120,000 பேரைப் பணிக்கமர்த்தியுள்ள முன்னணி தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ABB உடன் கிளாரியன் எனர்ஜி இணைந்து “It’s all about saving your money” எனும் பயிற்சிப் பட்டறையை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. 

வலுச் சேமிப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் குறைந்த வெளியக சாதனங்களினூடாக நெகிழ்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவசியமான வெவ்வேறு அப்ளிகேஷன்களில் VSDs (Variable Speed Drives) களை வழங்குவதில் உலகின் முதல் தரம் வாய்ந்த நாமமாக ABB திகழ்கிறது.   

இந்தப் பயிற்சிப் பட்டறையில் வெவ்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் 42 நிறுவனங்களைச் சேர்ந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகள், சிரேஷ்ட முகாமையாளர்கள், சிரேஷ்ட பொறியியலாளர்கள்,  தொழிற்சாலை முகாமையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.  

நான்கு பிரதான தலைப்புகள் குறித்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. வலு வினைத்திறன், செயற்பாடுகள், பராமரிப்பு, வலுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க வலு போன்றன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.  

ABB பிரதிநிதிகள், உதவி விற்பனை முகாமையாளர் லக்மால் சில்வா, பொறியியலாளர் கசுன்ஜித் அமரசிறி ஆகியோர் தயாரிப்புகள் தொடர்பான விளக்கங்களை பயிற்சிப் பட்டறையில் வழங்கியிருந்தனர். 

விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், நாட்டில் காணப்படும் 30 சதவீதமான நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள் மாத்திரமே VSD களை பயன்படுத்தி வலு சேமிப்பு, பாதுகாப்பை பெறுவதாகவும், இந்த தயாரிப்பை இலகுவாக நிறுவிக் கொள்ள முடியும் என்பது பற்றிய விளக்கங்களையும் வழங்கியிருந்தனர்.  

கிளாரியன் எனர்ஜி பிரதம செயற்பாட்டு அதிகாரி கிஷோ மஹேந்திரன், இந்தப் பயிற்சிப்பட்டறையில் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக, இலங்கையின் 1,300 க்கும் அதிகமான முன்னணி நிறுவனங்களுக்கு பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வலுவைச் சேமித்துக் கொள்வதற்கு கிளாரியன் எனர்ஜி பங்களிப்பு வழங்கியுள்ளது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X