S.Sekar / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் கொடுக்கல் வாங்கல்கள் இன்றைய தினம் (2) இரு தடவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. கடந்த வாரங்களில் பதிவு செய்திருந்த சடுதியான உயர்வைத் தொடர்ந்து, சந்தைச் சீராக்கம் இடம்பெறும் நிலையில், S&P SL 20 சுட்டெண் 5 சதவீதத்துக்கு அதிக வீழ்ச்சியை பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து பி.ப. 1.31 மணி முதல் அரை மணி நேரத்துக்கு இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்ட போது, தொடர்ந்தும் 7.75 சதவீதத்துக்கு குறைவாக S&P SL 20 சுட்டெண் வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து பி.ப. 2.17 மணி முதல் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.
பி.ப. 2.30 மணிக்கு பங்குப்பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவு செய்யப்படும் போது, S&P SL 20 சுட்டெண் 6.25 சதவீதத்துக்கு மீட்சியடைந்திருந்ததாக பங்குப்பரிவர்த்தனை தரவுகளினூடாக அறிந்து கொள்ள முடிந்தது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5.77 சதவீத சரிவையும் பதிவு செய்திருந்தது.
இலங்கையின் பங்குப் பரிவர்த்தனை கடந்த வாரங்களில் அசாதாரணமான வகையில் உயர்வை பதிவு செய்திருந்ததுடன், சில நிறுவனங்களின் பங்குகளின் மீது உயர் இலாபத்தையும் பதிவு செய்திருந்தது.
உலகின் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் பங்குப்பரிவர்த்தனைகளில் ஒன்றாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
16 minute ago
1 hours ago