Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) திட்டப்பணிக்கான வங்கியின் அர்ப்பணிப்புக்காக சர்வதேச அங்கீகாரத்தை ஏற்படுத்தி வரும் யூரோமனி விருதுகள் நிகழ்வில் (Euromoney Awards for Excellence) கொமர்ஷல் வங்கி, 2024 ஆம் ஆண்டில் ‘ESG க்கான இலங்கையின் சிறந்த வங்கி'ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கி வென்ற மதிப்புமிக்க யூரோமனி விருது, வங்கியின் கிளை வலையமைப்பு முழுவதும் ESG திட்டப்பணியின் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் வங்கியால் செயல்படுத்தப்பட்ட பல உள்ளக மற்றும் வெளியக முயற்சிகள் மற்றும் செயல்முறைகளினை அங்கீகரிக்கிறது.
ஆற்றல்-திறனுள்ள செயல்பாடுகள் ஊடாக சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல், அதன் கார்பன் தடத்தைக் குறைத்தல் மற்றும் பசுமையான எதிர்காலத்தை ஆதரிப்பதற்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாக வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி நிதியியல் உள்ளடக்கம், பாலின சமத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் சமூக நிலைப்பேற்றினை தீவிரமாக ஊக்குவிக்கிறது. உதாரணமாக, வங்கியின் மகளிர் வங்கி முயற்சியானது, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தேவையான நிதியியல் கருவிகள், வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அவர்களை வலுப்படுத்துகிறது. மேலதிகமாக, இலக்கிடப்பட்ட சமூக திட்டங்கள் மற்றும் பங்குடைமை மூலம் பின்தங்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன்செயற்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க தெரிவிக்கையில், 'எமது வலுவான நிர்வாக திட்டப்பணியானது, எங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஒருமைப்பாடு, பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் தொழில்துறை அளவுகோல்களை உறுதிப்படுத்துகிறது. 'கூட்டாண்மை நிர்வாகத்தின் மிக உயர்ந்த தரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், எங்கள் வங்கி மற்றும் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதிசெய்து, மிகுந்த நேர்மை மற்றும் பொறுப்புடன் செயல்படுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். 'இந்த முழுமையான அணுகுமுறையின் மூலம், கொமர்ஷல் வங்கி தனது வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலைப்பேற்றினை ஒருங்கிணைத்து, அதன் செயல்பாடுகள் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் சாதகமாக பங்களிப்பதை உறுதி செய்வதில் அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது எனறார்.
யூரோமனி விருது என்பது, வங்கியின் பன்முக சமூகத் திட்டங்களின் பயன்களுக்கான ஒரு அங்கீகாரமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
44 minute ago
1 hours ago