Freelancer / 2024 மார்ச் 04 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையானது பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கத்தினால் (ACCA) அண்மையில் வழங்கப்பட்ட நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகளில் வங்கிப் பிரிவில் ஒட்டுமொத்த இரண்டாம் நிலை மற்றும் கூட்டு வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டது.
கொமர்ஷல் வங்கிக்கு ஒட்டுமொத்த இரண்டாம் நிலை விருதை வழங்கிய ACCA நடுவர்கள் 'இந்த கடினமான பொருளாதார சவால்களின் மத்தியிலும் பெரும் இடரினை நோக்கிய சமூகத்தின் மீது அக்கறை காட்டும் வகையில் அதன் வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த அறிக்கையை வங்கி சமர்ப்பித்துள்ளது' என்று குறிப்பிட்டனர்.
வங்கிப் பிரிவில் வங்கியின் வெற்றி குறித்து நடுவர்கள் தமது கருத்தினை தெரிவிக்கையில்'' இந்த அறிக்கையில் நிலைத்தன்மைக்கான வழிகாட்டும் கோட்பாடுகள் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிப்பிரிவில் (SME) 50% பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை (UNGC) மற்றும் நிலைத்தன்மை அபிவிருத்தி இலக்கு (SDG) களை உள்ளடக்கிய ஒரு சிறந்த நிலைத்தன்மை திட்டப்பணியாக இது உள்ளது. வர்த்தக மாதிரி சூழலியல், சமூக மற்றும் வழிநடத்தல் (ESG) பரிசீலனைகளை ஒருங்கிணைக்கிறது. தேசிய சுகாதார சேவைகள் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு தொடர்பான சுற்றுச்சூழல் நிறுவனங்களுக்கான பங்களிப்பு தேசிய நல்வாழ்வுக்க்கான பெறுமதிமிக்க பங்களிப்பாகும். ஊழியர்கள் நிலைத்தன்மை தேவைகளில் பயிற்சிக்கு உட்பட்டவர்களாக திகழ்கின்றனர்.
ACCA நிலைத்தன்மை அறிக்கையிடல் விருதுகள் வருடாந்த அறிக்கைகளை அங்கீகரிக்கின்றன, அவை வர்த்தகத்தின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை உள்ளக மற்றும் வெளியக பங்குதாரர்களுக்கு தெளிவாக விளக்குகின்றன. நிலையான வளர்ச்சியின் இலக்கை நோக்கி நிறுவனத்தின் கொள்கைகள், இலக்குகள் மற்றும் நீண்ட கால நோக்கங்களை நிரூபிக்கின்றன.
8 minute ago
13 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
19 minute ago