Freelancer / 2024 ஜூன் 26 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளமான கொமர்ஷல் வங்கியின் 'ComBank Digital' பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கொமர்ஷல் வங்கி ஆரம்பித்த அற்புதமான புதிய பிரசாரத்தின் கீழ், 300 வாடிக்கையாளர்களின் மின்சாரக் கட்டணங்கள் வங்கியினால் மீள வழங்கப்படுவதுடன் மூன்று வாடிக்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு சிங்கப்பூர் பயணப் பொதியை வெல்லவுள்ளனர்.
இந்த பெறுமதி மிக்க பரிசில்கள் இரண்டு ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதற்கிணங்க 'கொடுப்பனவை செலுத்தி வெல்லுங்கள்' (Pay and Win) மற்றும் 'பரிவர்த்தனை செய்து வெல்லுங்கள்' (Transact and Win) ஆகிய இரு ஊக்குவிப்பு திட்டங்களும் ஆகஸ்ட் 2024 இறுதி வரை நடைமுறையில் உள்ளதுடன், இவை தற்போதுள்ள ComBank Digital இனை பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் தகுதி பெற்ற புதிய பதிவுதாரர்களுக்கும் திறந்திருக்கும்.
'கொடுப்பனவை செலுத்தி வெல்லுங்கள்' (Pay and Win) ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ComBank Digital மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தும் 300 வாடிக்கையாளர்களுக்கு 10,000 ரூபாய் வரை பணம் மீள வழங்கப்படும்.
ஒரே நேரத்தில் இயங்கும், 'பரிவர்த்தனை செய்து வெல்லுங்கள்' (Transact and Win) ஊக்குவிப்பு திட்டமானது, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கானதாகும். இது தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மாதத்திற்கு மூன்று பயன்பாட்டு கட்டணங்களை செலுத்துதலை உள்ளடக்குகிறது. இவர்கள் சீட்டிழுப்புக்கு உள்ளாக்கப்பட்டு அதில் மூன்று அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள், 6 சிங்கப்பூர் சுற்றுப்பயணங்களுக்கு தெரிவு செய்யப்படுவர்.
'ComBank Digital" ஆனது ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது, இந்நிலையில் இந்த எண்ணிக்கையை ஊக்குவிப்பதுடன் மேலும் அதிகரிப்பதே எங்கள் நோக்கம்' என்று கொமர்ஷல் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் உதவி பொது முகாமையாளர் பிரதீப் பந்துவன்ச தெரிவித்தார். 'இந்தப் பிரசாரம் ComBank Digital இன் பரந்த பயன்பாட்டைத் தூண்டுவதுடன், மேலும் அதிகமான மக்கள் உற்சாகமான பரிசில்கள் மற்றும் பணம் மீளப்பெறலை (கேஷ்பேக்குகளை) வெல்வதற்கான அதிக நன்மைகளுடன் அதன் செயல்பாடு மற்றும் வசதியை அனுபவிக்க உதவுகிறது.
புதிய வாடிக்கையாளர்கள் ComBank Digital இல் முதல் வருட வருடாந்தக் கட்டணம் மற்றும் இணைவதற்கான கட்டணம் இல்லாமல் பதிவு செய்து அதன் சௌகரியம், புதிய அம்சங்கள், இயங்குதளத்தின் பயனர்களுக்கு எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள நன்மைகள் மற்றும் சலுகைகளை அனுபவிக்கலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
16 minute ago
18 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
26 minute ago