Freelancer / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, இலங்கையில் மாணவர் கல்வி வாய்ப்பு முகவர் நிறுவனமான AusAsia Education Consultants (Pvt) Ltd. உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கொமர்ஷல் வங்கி வழங்கும் சிறப்பு கடன் திட்டத்தின் மூலம் பயனடையும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மூலோபாய பங்குடைமையானது, மாணவர் கோப்புகளுக்கான வங்கியின் கல்விக் கடன்கள் மற்றும் வெளிநாட்டு கல்விக்கான நிதியுதவியை மேம்படுத்துவதை எளிதாக்குவதுடன், இதனால் மாணவர்கள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உயர்கல்வியைத் தொடரும்போது கவர்ச்சிகரமான விதிமுறைகளுடன் நிதி உதவியை பெற முடியும்.
AusAsia Education புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் பரந்த வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் வாடிக்கையாளர்கள் தற்போது கொமர்ஷல் வங்கியில் மாணவர் கோப்புகளைத் திறந்து பாடநெறி கட்டணத்தில் 75% வரை கல்விக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம், அதிகபட்சமாக ரூ.10 மில்லியன் வரை, நெகிழ்வான மீளச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சலுகைக் காலத்துடன் இக்கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆவணக் கட்டணங்களில் 50% கழிவு மற்றும் அவர்களின் முதல் தந்தி பரிமாற்றக் கட்டணத்தைப் பெறுவார்கள்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கியியல் உதவி பொது முகாமையாளர் கபில லியனகே மற்றும் AusAsia Education இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரோஷன் ரணவீர ஆகியோர் கையெழுத்திட்டனர்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% காபன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026