2025 ஜூலை 23, புதன்கிழமை

கொழும்பு சர்வதேச நிதி நகரில் முதல் கட்டடம்

Editorial   / 2018 ஜனவரி 30 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சர்வதேச நிதி நகரில், முதலாவது இரு கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும் சீனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனியும் (CHEC) கைச்சாத்திட்டுள்ளதாக மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.   

புதிதாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணியில் முதலாவது கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான தனது ஆர்வத்தை சீனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி (CHEC) வெளிப்படுத்தியிருந்தது.

இதற்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. மேலும் நிலக்கீழ் மரைன் டிரைவ் வீதி சுரங்கப்பாதையையும் நிர்மாணிக்கவுள்ளது என்றார்.  

இந்தத் தொகுதி நிர்மாணப்பணிகள் 2018 ஜுன் மாதமளவில் ஆரம்பமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தொகுதி மூன்று கட்டடங்களைக் கொண்டிருக்கும்.

தலா 45 மாடிகளை கொண்டிருக்கும் என்பதுடன், நிதிச்சேவைகள், உயர் வசதிகள் படைத்த அலுவலகப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.  

இந்த மூன்று கட்டடங்களுக்கும் கீழாக நிர்மாணிக்கப்படும் தொகுதியில் உணவகங்கள், நுகர்வோர் வசதிகள் மற்றும் களிப்பூட்டும் அம்சங்கள் உள்ளடங்கியிருக்கும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .