Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் பொருளாதார சூழல்நிலைகள், அரசியல் நிலைவரங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, 2017இல் பின்பற்றக்கூடிய சிறந்த வியாபார சிந்தனைகளை கோல்ட்மென் சக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்வது என்பது தொடர்பிலும் சீனாவின் பொருளாதார சூழ்நிலைகள் போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு இந்த அறிவுரைகளை கோல்ட்மன் சக்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் ஆறு சிந்தனைகள் தற்போது காணப்படும் வங்கிகளின் அழைப்பின் தொடர்ச்சியாக அமைந்துள்ளதுடன், ஏனையவை புதிய சிந்தனைகளாக அமைந்துள்ளன.
வருடாந்தம் கோல்ட்மன் செக்ஸ் நிறுவனத்தினால் சர்வதேச சூழ்நிலைகள் ஆராயப்பட்டு, எதிர்வரும் ஆண்டில் தமது வியாபார வியூகங்களை எவ்வாறு முன்னணி நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரை வழங்கப்படுவதுண்டு. ஆயினும், 2015ஆம் ஆண்டில் 2016ஆம் ஆண்டு தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்தப் பரிந்துரைகளை பெப்ரவரி மாதமளவிலேயே குறித்த அறிவுரைகளை பின்பற்றும் நிறுவனங்கள் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்சங்களில் அபிவிருத்தியடைந்த சந்தையின் குடித்தொகையில் அமெரிக்க டொலர் முக்கிய இடத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் நாணயம் தொடர்பில் ட்ரம்ப் தொடர்ந்து அதிருப்தியைக் கொண்டிருப்பார் என்பதன் மீதான பந்தயம், வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சரியான நாணயத்தைக் கொண்டிருப்பது, நீண்ட கால அடிப்படையில் யூரோ நாணய சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்வது, சந்தை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரிக்கும் எனும் எதிர்பார்ப்பு, ஐரோப்பாவின் தொகுதிக்கடன்களின் வளர்ச்சி போன்றன அடங்கியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .