2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் Park Inn by Radisson

Gavitha   / 2017 ஜனவரி 20 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நட்சத்திர வகுப்பு விருந்தோம்பல் வர்த்தக நாமமான Park Inn by Radisson®, இலங்கையில் தனது ஹொட்டலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இதில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க பங்கேற்றிருந்தார். சென் அந்தனீஸ் குரூப் ஒஃவ் கம்பனிஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சொஃபியா ஹொஸ்பிடாலிட்டி பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் முதலீடாக இது அமைந்துள்ளது.

199 அறைகளைக் கொண்ட, உயர்ந்த மத்தியளவு நகர ஹொட்டலாக அமைக்கப்படும் இந்த ஹொட்டல், தனது செயற்பாடுகளை 2019ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் கொழும்பில் நிர்மாணத்துறையில் பிந்திய உள்ளங்கமாக இணைந்துள்ள இந்த ஹொட்டல் நிர்மாணத்துக்காக 25.5 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன வசதிகளை இந்த ஹொட்டல் கொண்டிருக்கும் என்பதுடன், வியாபார நோக்கில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். கொழும்பில் மையப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த ஹொட்டல், 150,000 சதுர அடியில் அமையவுள்ளது. போதியளவு வாகனத் தரிப்பிட வசதியைக் கொண்டிருக்கும் என்பதுடன், நட்சத்திர வகுப்பிலமைந்த கருத்தரங்கு மற்றும் வைபவ அறைகளைக் கொண்டிருக்கும்.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய சந்திப்புகள், வைபவங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு மிகவும் பொருத்தமானப் பகுதியாக அமைந்திருக்கும். அடிக்கல் நாட்டும் வைபவத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள தினத்தன்று இந்த ஹொட்டல் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவது நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. உயர் மட்ட சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கான நடவடிக்கைகளை நாடு முன்னெடுக்கும் நிலையில், நாட்டில் Radisson குழுமத்தின் பிரவேசம் என்பது நாடு எதிர்கொண்டு வரும் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X