Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சன்சில்க் மற்றும் ரமணி பெர்னாண்டோ கல்வியகம் ஒன்றிணைந்து, இலங்கையில் இளம் மங்கையரின் கூந்தல் பராமரிப்பில் புதுப்பிக்கப்பட்ட சத்துகள் நிறைந்த சன்சில்க் தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. கூந்தல் பராமரிப்பு மற்றும் அழகுக்கலைத் தொழில்துறை நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ள இப்புதியத் தயாரிப்புகள் பண்டிகைக்காலத்தைத் தொடங்கிவைக்கும் இவ்வேளை, கூந்தல் பராமரிப்பு சந்தையில் புதியதோர் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகப் பிரசித்திப் பெற்ற ஏழு கூந்தல் பராமரிப்பு நிபுணர்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய சன்சில்க் தயாரிப்புகள் மிகச்சிறந்தப் பயன்களைத் தரக்கூடிய உள்ளீடுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில தயாரிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கரட்டின் யோகட் போஷாக்கு நிறைந்த திக் அன் லோங்க், 5 இயற்கை எண்ணெய் சத்துமிக்க சொப்ட் அன்ட் ஸ்மூத், பட்டுப்புரதங்கள் போசாக்குமிக்க பேர்ஃபெக்ட் ஸ்ரெயிட் மற்றும் கெரட்டின், கல்சியம் நிறைந்த டமேஜ் ரிஸ்ட்டோர் ஆகியன இதில் அடங்கும். இத்தயாரிப்புகள் இலங்கையின் இளம் மங்கையரின் பல்வேறுப்பட்ட கூந்தல் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதோடு, அவர்கள் விரும்பும் நீண்ட, பளபளப்பான, அடர்த்தியான, ஸ் ரெயிட்டான கூந்தலை பெற்றுத்தருகின்றது. மேலும் கண்கவர் வெளிப்புறத் தோற்றமும் முப்பரிமாண பொதியமைப்பும் போத்தலின் அழகை மேலும் மெருகூட்டுகின்றது.
இலங்கையில் கூந்தல் பராமரிப்பில் முன்னணி நிபுணராக விளங்கும் சன்சில்க், இலங்கையின் சிகையலங்காரத் துறையில் முன்னோடியாக விளங்கும் ரமணி பெர்னாண்டோவின் சிகையலங்கார தொழிலின் 40 ஆண்டுகால நிறைவை சிறப்பிக்கும் முகமாக கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் தனது புதியத் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வைக்கின்றது. இந்நிகழ்வில் இரு நிபுணர்களும் இணைந்து எதிர்வரும் வருடங்களில் வரவுள்ள புதிய சிகையலங்காரப் பாணிகளுக்கு ஏற்ப எதிர்கால கூந்தல் பராமரிப்புத் தொடர்பான விளக்கங்களைக் காட்சிப்படுத்தவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .