Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் Co., Ltd.தொடர்ந்தும் திறன்பேசிச்சந்தையில் கலக்சி நோட்7 (Galaxy Note7) உடன் முன்னிலை வகிக்கின்றது.
இந்த புதிய திறன்பேசியின் அறிமுகத்துடன், நிறுவனத்தின் பிரிவு-வரையறுக்கும் தலைமைத்துவம் மற்றும் பெரிய காட்சித் திரை கொண்ட சாதனங்களுக்கான புதிய நியமத்தை நிர்ணயிக்கும் புத்தாக்க சிறப்பம்சங்கள் ஆகியன மீண்டும் நிலைநிறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செம்மைப்படுத்தப்பட்ட கைவினைத்திறன், ப்ரீமியம் மூலப்பொருட்கள், தனித்துவமிக்க சமச்சீர் விளிம்பு (symmetrical edge design) வடிவமைப்பு ஆகியவற்றை கொண்ட கலக்சி நோட் 7 சிறப்பம்சங்களாக பின்வருவன விளங்குகின்றன.
1. நீர்த்தடுப்பினை அளிக்கும் Water resistant body kw;Wk; S Pen (IP68)
2. Samsung Knox மற்றும் biometric authentication உள்ளிட்ட புதிய iris scanning வசதி ஆகியவற்றை கொண்ட அதிமேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு சிறப்பம்சங்கள்
3.HDRசு வீடியோ ஸ்ட்றீமிங் வசதி உள்ளிட்ட பொழுதுபோக்கு சிறப்பம்சங்கள்
கலக்சி நோட்7 ஆனது, பணி மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கிடையில் சமச்சீர்த்தன்மையை பேணுவதுடன், பாவனையாளர்கள், திறன்பேசி ஒன்று என்ன செய்யும் என நினைப்பார்களோ, அதற்கும் மேலதிக செயற்றிறன்களை அளிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது.
'கலக்சி நோட் 7ஆனது செயற்றிறன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளதுடன், வலுவான பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு விளங்குகின்றது. சக்திமிகு சுற்றுச்சூழல் கட்டமைப்பைக் கொண்டுள்ள இது, வாழ்க்கையில் மேலும் சாதிக்க விரும்புவோருக்கு மிகப்பொருத்தமான சாதனமாகும்' என சம்சங் இந்தியா எலக்ட்ரோனிக்ஸ் ஸ்ரீ லங்கா முகாமைத்துவ பணிப்பாளர் யங்மின் ஷின் அவர்கள் குறிப்பிட்டார்.
'முன்னெப்போதுமில்லாத அளவு வாழ்க்கை துரிதமாக நடைபோடுகின்றது. கலக்சி நோட் 7ஆனது, பாவனையாளர்கள், எங்கும் எப்போதும் இலகுவாக தமது விடயங்களை முன்னெடுக்க உறுதுணையாக விளங்குகின்றது' என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .