2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சம்பத் காஷ் வாசி 4 இலட்சாதிபதிகள் அறிவிப்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொருளாதாரத்துக்கு வலுச்சேர்த்து, தமது குடும்ப அங்கத்தவர்களுக்கு வளமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்க வெளிநாடுகளில் பணியாற்றிவரும் இலங்கையர்களுக்காக 2016 மார்ச் மாதம் முதல் சம்பத் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சம்பத் eRemittance “காஷ் வாசி 4” நிகழ்ச்சித்திட்டம் இதுவரையில் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதற்கமைய, மே, ஜுன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்பத் வங்கியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.  

சம்பத் eRemittance “காஷ் வாசி 4” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுக்காக வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவதுடன், இதன் அடிப்படையில் மே,ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான வெற்றியாளர்களாக லுனுகடியமடித்தே பகுதியைச் சேர்ந்த எம்.பி.கீதா குமாரி, நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ருவனி விக்ரமகே மற்றும் கந்தானையைச் சேர்ந்த நதீகா சுதர்ஷனி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்காக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான பரிசை சம்பத் வங்கியின் சர்வதேச வியாபாரங்களுக்கான பொது முகாமையாளர் - சனத் அபயரட்ன வழங்கியிருந்தார்.  
இதன் போது ஜூலை மாத வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த நதீகா சுதர்ஷனி கருத்துத்தெரிவிக்கையில், ‘வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இது போன்று கௌரவிப்பது தொடர்பில் நாம் சம்பத் வங்கிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரிய செல்வது, நிதிநெருக்கடியிலிருந்து மீட்சிபெறும் நோக்கிலாகும். இதுபோன்ற பணப்பரிசை பெற்றுக்கொடுப்பது உண்மையில் எமக்கு மாபெரும் உதவியாக அமைந்துள்ளது. நாம் எப்போதும் சம்பத் வங்கியுடன் இணைந்திருப்பது, வங்கிக்கு எம்மைப்பற்றியும், எமது தேவைகள் பற்றியும் நல்ல அபிப்பிராயம் காணப்படுவதாலாகும்’ என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X