2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சவுத் ஏசியா டெக்டைல்ஸ் லிமிடெடுக்கு விருது

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் முன்னணியான ஆடைத் தயாரிப்பு வர்த்தக நாமங்களான Victoria Secret, Next, Marks & Spencer, Tesco, Calvin Klein, Decathlon, Hugo Boss and Adidas ஆகியவற்றுக்கு தரமான பின்னப்பட்ட துணிகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் ஆடை தயாரிப்பு நிறுவனமான சவுத் ஏசியா டெக்டைல்ஸ் லிமிடெட் அண்மையில் நிறைவுபெற்ற NCE ஏற்றுமதி விருது 2018இல் ‘பாரிய ஏற்றுமதிக்கான விநியோக மற்றும் சேவை வழங்குனர்’ பிரிவில் வெள்ளிவிருதைப் பெற்றுக்கொண்டது.  

இந்தப் பிரிவில் தங்க விருது எவருக்கும் வழங்கப்படவில்லை என்பதால் சவுத் ஏசியா டெக்டைல்ஸ் உயர்ந்த விருதைப் பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.  

பெருமைக்குரிய விருது வழங்கும் விழாவில் கம்பனி பெற்றுக் கொண்ட வெற்றி தொடர்பில் கருத்துத் தெரிவித்த சவுத் ஏசியா டெக்டைல்ஸ் லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பிரித்திவ் துரை, “நாம் மீண்டும் ஒருமுறை எமது சிறப்பான செயற்பாட்டுக்காக என்.சி.ஈ ஏற்றுமதி விருது 2018இல் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ‘பாரிய ஏற்றுமதிக்கான விநியோக மற்றும் சேவை வழங்குனர்’ பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் நாம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். இது எமக்குக் கிடைத்த தனிமையான கௌரவம் அல்ல, வருடா வருடம் நாம் கவனம் செலுத்திவரும் எமது உற்பத்திகளின் சிறந்த தரம் என்பவற்றுக்குக் கிடைத்த அங்கிகாரமுமாகும்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X