2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு உதவி

S.Sekar   / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு சுமார் 0.3 மில்லியன் பெறுமதியான HDU படுக்கைகளை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த உபகரணங்களை, பிராந்திய முகாமையாளர் மற்றும் அவரது குழுவினர், நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் வழங்கியிருந்தனர்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில். சியபத பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எம்.எச்.எம்.பிரிம்சாத் உள்ளிட்ட குழுவினர், வைத்தியர்கள், தாதி உத்தியோஸ்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொவிற் -19 தொற்று உக்கிரமடைந்து இருந்த காலகட்டத்த்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த டாக்டர் ஜீ.சுகுணன் இதற்கான முன்மொழிவை செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X