2025 மே 19, திங்கட்கிழமை

சிறிய நடுத்தர வர்த்தகங்களை ஊக்குவிப்பதற்காக வட்டி வீதம் குறைப்பு

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சிறிய, நடுத்தர வணிகங்களுக்காக மேலதிகமான ஆதரவை வழங்குவதற்காக, தமது வணிகக் கடன்களுக்கான வட்டி வீதங்களைக் குறைப்பதாக, கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.   

வங்கியின் வணிகக் குழுவான Biz Club இல் உறுப்பினர்களாக உள்ளோருக்கும் புதிய சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கும், ஆண்டுக்கு 13 சதவீதம் என்ற வட்டி வீதத்தில், 250 மில்லியன் ரூபாய் வரையில் கடன்கள் வழங்கப்படுமென வங்கி தெரிவித்தது.   

பேரினப் பொருளாதாரச் சவால்களால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதற்காக மாத்திரமன்றி, வங்கியுடன் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் கொண்டுள்ள நீண்டகால, விசுவாசமான உறவை அங்ககரிப்பதற்காகவும் இந்த வட்டி வீதக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என வங்கி தெரிவித்தது. இதன்மூலமாக, சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகளுக்கு மிகவும் விரும்பப்படும் வங்கி என்ற வங்கியின் நிலைமையை இது தக்கவைத்துள்ளது.   

இலங்கையின் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சித் துறைக்கு அதிக தொகைகளை வழங்குவோரில் ஒன்றான கொமர்ஷல் வங்கி, எதிர்காலத்தில் சிறிய, நடுத்தரத் தொழிற்றுறைக்கு நன்மையளிக்கும் விதமாக, மேலும் போட்டித்தன்மையுடன் கூடிய வட்டி வீதங்களையும் மீளச் செலுத்தலில் பொருத்தமான தெரிவுகளையும் வழங்குமென, வங்கி தெரிவித்தது.   

கொமர்ஷல் வங்கியின் வணிகக் கடன்கள் திட்டத்தில், பணத்தைப் பெற்றவரின் பண வருகையைப் பொறுத்துச் சலுகைக் காலத்துடன் கூடிய ஐந்து ஆண்டுகள் வரையில் பணத்தைச் செலுத்தக்கூடிய வசதி, போட்டித்தன்மையான வட்டி வீதங்கள், தெரிவுசெய்யப்பட்ட வசதிகளுக்கான செயற்றிற்ற அறிக்கைகள் தேவையில்லாத நிலைமை, விண்ணப்பதாரர்களின் தேவைகளுக்கேற்றவாறு அமைக்கப்பட்ட கடன் எல்லை அளவுகள், சிறிய - நடுத்தரத் தொழில் முயற்சிகள் தொடர்பில் விழிப்புணர்வுகளையும் அறிவையும் அதிகரிப்பதற்கான பயிலரங்குகளிலும் ஆய்வரங்குகளிலும் பங்குபெறுவதற்கான வாய்ப்பு ஆகியன உள்ளடங்குகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X