Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 12:34 - 2 - {{hitsCtrl.values.hits}}
காலத்தின் தேவையாக அமைந்துள்ள சுற்றுலாத்துறை சார்ந்த, திறன் படைத்தவர்களுக்கான இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில், இலங்கையின் இளைஞர்கள், யுவதிகளுக்கு வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தொழில் வாய்ப்புகளின் பாதுகாப்புத்தன்மை, சவால்களை கையாளும் முறைகள் மற்றும் வளர்ச்சிக்காக காணப்படும் வாய்ப்புகள் போன்றவற்றை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க, தனியார்துறை சுற்றுலா திறன் கழகம் (TSC) முன்வந்துள்ளது.
மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் திறன் விருத்தி, தொழிற்பயிற்சி அமைச்சு ஆகியவற்றின் விசேட கோரிக்கையின் பிரகாரம் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையில் காணப்படும் தொழிலாளர் சார் சவால்கள் மற்றும் திறன் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய, தனியார்துறை சுற்றுலா திறன் கழகம் எண்ணியுள்ளது.
மேலும், பயிற்சி நிலையங்களில் வழங்கப்படும் கற்கைகள், பிரயோக செயற்பாடுகள் சார்ந்தவையாக இருப்பதை உறுதி செய்வதுடன், சந்தையின் தேவைப்பாடுகளுக்கமைய காணப்படுவதுடன், சர்வதேச ரீதியில் பின்பற்றப்படும் சிறந்த செயற்பாடுகளைப் பின்தொடரும் வகையில் அமைந்துள்ளன.
தனியார் துறை சுற்றுலா திறன் கழகத்தின் நடவடிக்கைகளை தனியார் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் முன்னெடுக்கின்றன.
இந்த திட்டம் தொடர்பில் Dilmah Teaஇன் விருந்தோம்பல் பிரிவான ரெஸ்பிளென்டன்ட் சிலோன் முகாமைத்துவ பணிப்பாளரும் தனியார்துறை சுற்றுலா திறன் கழகத்தின் தலைவருமான மலிக் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இதை ஒரு மூலோபாயத் திட்டமாக குறிப்பிட வேண்டாம். எம்மிடம் இவ்வாறான பல திட்டங்கள் காணப்பட்ட போதிலும், எவரும் இவற்றைப் பின்பற்றுவதில்லை. இந்தத் திட்டம் ஏனையவர்களையும் இணைத்துக் கொண்டு, பயணிப்பதற்கான அழைப்பாகும். எம்முடன் ஏனையவர்களும் இணைந்து கொள்வார்கள் என எண்ணுகிறோம். ஆனாலும், நாம் எவருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை” என்றார்.
ஆரம்ப நிலைக் கற்கைகளைத் தனியார் துறை சுற்றுலா திறன் கழகம் வடிவமைத்துள்ளதுடன், மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கல்வியகத்துடன் இணைந்து, அவற்றை மெருகேற்றவும் திட்டமிட்டுள்ளது. மேலும், சர்வதேச போக்குகளுக்கமைய, புதிய கற்கைகளை வழங்க இலங்கை திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் அறிமுக நிகழ்வில், USAIDஇன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் ரீட் ஏசில்மன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டம் தனியார் துறையிடமிருந்தான நோக்கம், தலைமைத்துவம் மற்றும் ஒன்றிணைவு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் திறமையான இளைஞர்கள், யுவதிகளுக்குப் பெருமளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்திருக்க வேண்டும்” என்றார்.
“சுற்றுலாத் துறையில் 2017-2020 நடைமுறை செயற்றிட்டங்களைத் தயாரிப்பதற்காக, நிறுவனங்கள் பலவற்றுடன் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களில் சிலர், செயற்பட்டு வருவதைக் காண்பது, உண்மையில் வரவேற்கக்கூடியதொன்றாகும். தொழிற்துறையின் ஏனைய நிறுவனங்களும் ஒன்றிணைவார்களென எதிர்பார்க்கின்றேன். மெச்சத்தக்க வகையில் நடைபெற்றால், அதற்கான ஒத்துழைப்புகளை வழங்க, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தயாராகவுள்ளது” என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இத் தொழிற்துறைக்காக அதிகளவில் பெண்களை உள்வாங்குவது, தனியார் துறையின் சுற்றுலா திறன் குழுவின் திட்டத்தின் ஒரு குறிக்கோளாக அமைந்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொடர்பாக You Lead நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள காணொளி திரையிடப்பட்டது.
கனடாவின், உலக பல்கலைக்கழக சேவை தொழிற்கல்வியின் எண்ணக்கருவை மாற்றியமைப்பது தொடர்பாக, (விசேடமாக பெண்கள் மத்தியில்) விசேட தேசிய செயற்றிட்டம் ஒன்றுக்காக காணொளி பயன்படுத்தப்படுகின்றது.
தனியார் துறை சுற்றுலா திறன் கழகத்தின் இந்தத் திட்டம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆய்வு, திறன் விருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி பாரம்பரிய அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கல்வியகம், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இளைஞர் தொழில் வாய்ப்பு மற்றும் வியாபார ஆரம்பநிலை திட்டம் (YouLead) ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகின்றன.
USAID அமைப்பால் 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் சர்வதேச நிறைவேற்று சேவை கூட்டாண்மைகள் அமைப்பால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டமாக YouLead அமைந்துள்ளது.
13 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025
Raman.A Thursday, 25 July 2019 09:57 AM
Ma
Reply : 0 0
ஆ.இராமன் Thursday, 25 July 2019 09:58 AM
முதுநிலை பட்டதாரி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
2 hours ago
21 Jul 2025