2025 மே 21, புதன்கிழமை

செலான் வங்கியின் விசேட சமய வழிபாடுகள்

Editorial   / 2018 மே 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி தனது 30 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெறுமதி வாய்ந்த மருத்துவ உபகரணங்களை வங்கி அன்பளிப்புச் செய்திருந்ததுடன், ஸ்ரீ நாக விகாரைக்கும் நிதி உதவிகளை வழங்கியிருந்தது.

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு Oxygen regulators, Emergency trolley, basic CCTV camera system with LED monitor, Bed side screen - powder coated, BP box – mercury மற்றும் Steel அலுமாரிகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன. ஸ்ரீ நாக விகாரையை மேம்படுத்துவதற்காக நிதி உதவியை வழங்கியிருந்தது.

குறைந்த வசதிகள் படைத்த பல பாடசாலைகள் மற்றும் சமூகங்கள் போன்றவற்றுக்கு தனது சமூக பொறுப்புணர்வு திட்டமான ‘செலான் பெஹெசர’ ஊடாக உதவிகளை வழங்கியுள்ளதுடன், குறைந்த வசதிகள் படைத்த சமூகங்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க தொடர்ச்சியாக தன்னை வங்கி அர்ப்பணித்துள்ளது.

இதற்கமைய அவசியமான நிதி மற்றும் உட்கட்டமைப்பு உதவிகளை வழங்கி வருகிறது. செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “செலான் வங்கியின் பயணத்தில் 30 வருடபூர்த்தி கொண்டாட்டங்கள் மிகவும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.

“நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக இதனை கொண்டாட நாம் தீர்மானித்துள்ளோம். வங்கியின் வெற்றிகரமான செயற்பாட்டை நாம் கொண்டாடுவதுடன், எமது பிரதான பங்காளர்களுடன் வெற்றிகரமான செயற்பாட்டை பகிர்ந்து கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம், இதனூடாக எமது 30 வருட பூர்த்தி கொண்டாட்டங்கள் வங்கிக்கும், இலங்கையின் மக்களுக்கும் மிகவும் அர்த்தமுள்ளவையாக அமைந்திருக்கும்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .