2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிங்கரிடமிருந்து சனசும ப்ளஸ் காப்பீட்டு வசதி அறிமுகம்

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் அதன் வாடிக்கையாளர்களுக்கு என சனசும பிளஸ் என்ற உத்தரவாத மற்றும் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. சனசும பிளஸ் என்பது, சிங்கர் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வருடங்கள் மேலதிகமாக நீடிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் அவர்கள் வாங்கும் சாதனங்கள் தொடர்பில் தீ மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான காப்பீட்டையும் வழங்கும். நாட்டிலுள்ள எந்தவொரு சிங்கர் விற்பனை நிலையத்திலும் கொள்வனவு செய்யப்படும் பொருள்களுக்கு சனசும பிளஸ் வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான ஒரு திட்டம் இலங்கையில் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.  

சனசும பிளஸ் ஏற்கெனவே நடைமுறையிலுள்ள சனசும திட்டத்தின் தரமுயர்த்தப்பட்ட ஒரு வசதியாகும். 2008ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள சனசும திட்டத்தின் கீழ் சிங்கர் வாடிக்கையாளர்கள் பொருளொன்றை வாங்கும்போது, ஒரு சிறிய மேலதிகக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் நீடித்த உத்தரவாதத்தைப் பெறுகிறார்கள். அதாவது, சிங்கர் விற்பனை நிலையமொன்றில் பொருள்களை வாங்குபவர்கள், சகல பொருள்களுக்கும் வழமையாக் கிடைக்கும் ஒரு வருட உத்தரவாதத்திற்கு மேலதிகமாக மேலும் இரண்டு வருட உத்தரவாதத்தைப் பெறுகிறார்கள். இதன்படி, பொருள் வாங்கப்பட்ட திகதியிலிருந்து மொத்தம் மூன்று வருடங்களுக்குள் இந்த உத்தரவாதத் திட்டத்தின் வாடிக்கையாளர்கள் பழுதுபார்ப்பு/ பராமரிப்பு சேவைகளையும் அசல் உதிரிப் பாகங்களையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறார்கள்.  

அறிமுகமாகவிருக்கும் சனசும பிளஸ் இதைவிட மேலானதொரு திட்டமாகும். இதன் கீழ் வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்யும் பொருள்களுக்கு தீ. மின்னல், வெள்ளப்பெருக்கு, சூறாவளி போன்ற அனர்த்தங்களுக்கு எதிரான காப்பீட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மின்சக்தி ஏற்றத்தாழ்வு, வெடிவிபத்து, கொள்ளை போன்றவற்றிற்கு எதிராகவும் காப்பீடு பெறப்படலாம். பணம் அல்லது கிரெடிட் கார்ட் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே சனசும பிளஸ் வசதி வழங்கப்படும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X