Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 21 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஸ்ரீ லங்கா, சிங்கர் Duo 2 in 1 மடிக்கணினி மற்றும் Tab சாதனத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சிங்கர் Lifestyle கண்காட்சி நிகழ்வில் இந்த உற்பத்தியை அறிமுகம் செய்திருந்தது. சிங்கர் ஸ்ரீ லங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ், சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகத்துறைப் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் மைக்ரோசொப்ட் தென் கிழக்கு ஆசியா புதிய சந்தைகளுக்கான அசர் உபகரண உற்பத்தியாளர் துறைப் பணிப்பாளரான புபுது பஸ்நாயக்க ஆகியோர் இந்த உற்பத்தியின் அறிமுக வைபவத்தில் கலந்து சிறப்பித்திருந்தனர். இலங்கையில் வளர்ச்சிகண்டுவருகின்ற, ஆர்வம் கொண்ட வாடிக்கையாளர் தளத்துக்குத் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, நவீன உற்பத்திகளை அறிமுகம் செய்து வைப்பதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்ற சிங்கர் நிறுவனத்தின் மற்றுமொரு புத்தாக்கமான அணுகுமுறையாக இந்த அறிமுகம் அமையப்பெற்றுள்ளது.
சிங்கர் Duo 2 in 1 மடிக்கணினியானது மடிக்கணினி வடிவம் மற்றும் tab சாதன வடிவம் என இரு வேறுபட்ட வடிவங்களில் வெவ்வேறாக அகற்றப்படக்கூடிய சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக பாவனையாளர்கள் தமது தேவையைப் பொறுத்து உபயோகத்திற்கு இலகுவான வழியில் தமது மடிகணினியை உபயோகிக்க முடியும். இந்த மடிகணினி அசல் வின்டோஸ் 10 செயற்பாட்டுத் தொகுதியுடன் Intel Z8300 Quad Core processor ஐக் கொண்டுள்ளது. 2GB மெமரி, 32GB உள்ளக தேக்ககம், 10.1” IPS முகத்திரை, கொள்ளக்கூடிய வகையில் 10 விரல்களாலும் இயக்கப்படக்கூடிய தொடுகைத் திரை, 2 Mega Pixel கமரா, Wi-Fi மற்றும் Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .