Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 24 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த SME வங்கியாக கொமர்ஷல் வங்கி பிரிட்டனின் இன்ட்நெஷனல் பினான்ஸ் மெகஸின் (IFM) சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை ஏற்படுத்தி அவர்களுக்கான கண்டு பிடிப்புக்கள் மற்றும் செயற்பாடுகளில் அதி உயர் தரங்களை அடைந்தமைக்காக இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு நிதி தொழிற்றுறையில் உயர் மட்ட பங்களிப்புக்காக வங்கிக்கு கிடைத்துள்ள அங்கிகாரமாகவும் இந்த விருது கருதப்படுகின்றது. IFMஇன் நிதி விருதுக்கான வகைப்படுத்தலில் இது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகை என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும்.
தனியார் வங்கிப் பிரிவுக்கான கொமர்ஷல் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் திருமதி. சன்றா வெல்கம இந்த விருதைப் பெற்றுக் கொள்ள அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு இடம்பெற்ற கோலாகலமான வைபவத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சாதனையாளர்கள் பலர் தங்களுக்கான விருதுகளைப் பெற்றுக் கொள்ள இங்கு வருகை தந்திருந்தனர்.
“இது கொமர்ஷல் வங்கி அடைந்துள்ள மற்றொரு சாதனையாகும். இது எமது பெறுமதி சேர் செயற்பாடுகள் மற்றும் SME பிரிவுக்கான தரமான சேவை என்பனவற்றையும் பிரதி பலிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று வெல்கம கூறினார். “SME பிரிவானது தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் பிரிவாகும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago