2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிறிய தொழில்முயற்சியாண்மை துறைக்கு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி உதவி

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்கும் வகையில், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, பிரத்தியேகமான வியாபாரக் கருத்தரங்கு ஒன்றை அநுராதபுரம் கோல்டன் மெங்கோ ரிசோர்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது.   

இந்தக் கருத்தரங்கில் 125 தொழில் முயற்சியாளர்கள் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாண்மைத் துறையிலிருந்து பங்குபற்றியிருந்தனர். வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான அமிந்த பெரேரா இந்நிகழ்வின் பிரதம பேச்சாளராகப் பங்கேற்றிருந்தார் என்பதுடன், பங்குபற்றுநர்களுக்கு அபிவிருத்தி மற்றும் பன்முகத்தன்மை தொடர்பில் பயனுள்ளத் தகவல்களை வழங்கியிருந்தார். மேலும் சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளில் நிலவும் தொழில்நுட்பப் போக்குகள் தொடர்பிலும் விளக்கங்களை வழங்கியிருந்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X