2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சேலிங்கோவின் சுற்றாடலுக்கு இசைவான புதிய கிளைக் கட்டட நிர்மாணம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 07 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுள் காப்புறுதித் துறை  தலைவர்களான செலிங்கோ லைஃப் அதன் பசுமைச் செயற்பாட்டு பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மற்றொரு முக்கிய கிளை அலுவலக கட்டிடத்தை பாணந்துறையில் நிர்மாணிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தக் கட்டிடம் 7000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிகளைக் கொண்டதாக வாடிக்கையாளர்களுக்கு வசதியாக அமையவுள்ளது. தற்போதைய கிளை ஊழியர்கள் இங்கிருந்து பணிபுரியத் தக்கதாக இந்தக் கட்டிடம் அமையும்.

தற்போது கம்பனி அதற்கு சொந்தமான காணிகளில் கிளைக் கட்டிடங்களை நிர்மாணித்து வருகின்றது. புதிய பாணந்துறை கிளைஇ இலக்கம் 400 காலி வீதி பாணந்துறை என்ற முகவரியில் அமையும். சூரிய சக்தி, சக்தி வளம் கொண்ட குளிரூட்டல் வசதி, ஒளியமைப்பு மற்றும் லிப்ட் என்பனவும் இங்கு அமைக்கப்படும். அத்தோடு மழை நீர் சேமிப்புத் திட்ட முறை ஒன்றும் இங்கு நிறுவப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு போதிய வாகனத் தரிப்பிட வசதி, ஊழியர்களுக்கான கலந்துரையாடல் அறை, பயிற்சி அறை என்பனவற்றையும் இந்தக் கட்டிடம் கொண்டிருக்கும்.

புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் நாட்டி வைத்தார்.

இதேபோன்ற மழை நீர் சேமிப்பு மற்றும் சக்திவள ஆற்றல்கள் கொண்ட கட்டிடங்கள் திருகோணமலை, வென்னப்புவ ஆகிய இடங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவை தற்போது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளன. நவம்பர் மாத இறுதியில் ஹொரணையிலும் இதே போன்ற கிளைக் கட்டிடம் ஒன்றின் பணிகள் தொடங்கவுள்ளதாக கம்பனி அறிவித்துள்ளது.

இவ்வருட ஆகஸ்ட் மாதத்தில் பண்டாரவளையில் சுற்றாடலுக்கு இசைவான நான்கு மாடிக் கிளைக் கட்டிடம் ஒன்றை கம்பனி திறந்து வைத்தது. செலிங்கோ லைஃப் ஏற்கனவே அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, களுத்துறை, குருணாகல், கம்பஹா, மாத்தறை, காலி, திஸ்ஸமஹாராம, நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொட்டாஞ்சேனை மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய இடங்களில் தனது சொந்தக் கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் தொழில்துறையில் ஆகக் கூடுதலான 250 கிளைகள் கொண்ட வலையமைப்பை செலிங்கோ லைஃப் நிறுவனமே செயற்படுத்துகின்றது. 142 நகரங்கள் புற நகர் பகுதிகள் மற்றும் கிராமங்களில் அது தனது செயற்பாட்டைக் கொண்டுள்ளது. இது நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

செலிங்கோ லைஃப் 2004ம் ஆண்டு முதல் நாட்டின் காப்புறுதி துறையில் தலைமை தாங்கும் நிறுவனமாகவும் திகழ்கின்றது. பத்து லட்சத்துக்கும் அதிகமான செயற்படு நிலையில் உள்ள காப்புறுதிகளை அது கொண்டுள்ளது. உள்ளுர் காப்புறுதித் துறையில் புதிய கண்டு பிடிப்புக்கள், உற்பத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் நலன், தொழில்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் வென்ற ஒரு நிறுவனமாகவும் அது திகழ்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X