2026 மே 07, வியாழக்கிழமை

செலான் வங்கிக்கு ரூ. 1,755 மில்.இலாபம்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவாக மாற்றமடையும் மற்றும் சவால்மிக்க வியாபாரச் சூழலுக்கு மத்தியிலும் செலான் வங்கியானது, 2016 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த ஆறு மாதங்களில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 1,755 மில்லியனைப் பெற்றுக் கொண்டதன் மூலம் ஒரு உறுதிமிக்க அரையாண்டு நிதிச் செயலாற்றுகையினை வெளிப்படுத்தியுள்ளது, 2015இன் இதே காலப்பகுதியில் ரூ. 1,740 மில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக பெற்றிருந்த நிலையிலேயே இவ்வதிகரிப்பினைச் செலான் வங்கிப் பதிவு செய்திருக்கின்றது.

வட்டி வீதங்களின் அதிகரிப்பின் காரணமாக உருவான 'சந்தை விலைச்சீராக்க நட்டங்களின்' Mark-to-market losses) தாக்கங்களுக்கு மத்தியிலும், மைய வங்கியியல் தொழிற்பாடுகளில் ஏற்பட்ட ஆரோக்கியமான வளர்ச்சியே மேற்படி சிறப்பான செயலாற்றலுக்கு வழிவகுத்தது. 2016 ஜூன் 30 ஆம் திகதியன்று முடிவடைந்த ஆறு மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானம் ரூ. 5,835 மில்லியனில் இருந்து ரூ. 6,147 மில்லியனாக, 5.34% இனால் அதிகரித்தது.

முற்பணங்களில் ஏற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் செயற்றிறன் வாய்ந்த விலையிடல் மூலோபாயம் ஆகியவற்றின் பயனாக இவ்வளர்ச்சிப் பெறப்பட்டது. கட்டணத்தை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தைப் பலப்படுத்துவது தொடர்பில் செலான் வங்கித் தொடர்ந்தும் கூடியக் கவனம் செலுத்திச் செயற்படுவதன் விளைவாக, ரூ. 1,191 மில்லியனாகக் காணப்பட்ட இவ்வகை வருமானம் 2016 இன் முதலாம் அரையாண்டில் ரூ. 1,432 மில்லியனாக 20.21% அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.  

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள், நிதிக் கருவிகளில் இருந்து கிடைக்கும் ஆதாயங்கள், அந்நிய செலாவணியின் மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது 2015 இல் ரூ. 1,035 மில்லியனாகப் பதிவுச் செய்யப்பட்டிருந்த நிலையில், 2016 இன் முதலாம் அரையாண்டு காலப் பகுதியில் ரூ. 611 மில்லியனாக 40.97% இனால் குறைவடைந்தது. வட்டி வீதங்களில் மேல்நோக்கிய நகர்வொன்றுக் காணப்பட்டதன் காரணமாக உருவான அரச பிணையங்களின் மீதான 'சந்தை விலைச் சீராக்க நட்டங்களே'

இவ்வாறு தொழிற்பாட்டு வருமானம் வீழ்ச்சியடைவதுக்கு பிரதான காரணியாக அமைந்தது. எவ்வாறாயினும், நாணயமாற்று விகிதங்களிலான ஏற்ற இறக்கங்கள் மற்றும் மிகையான வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்கள், வங்கியின் தேறிய நாணயமாற்று வருமானத்தில் 16.21% என்ற கணிசமான வளர்ச்சியை பதிவுச் செய்வதற்கு உதவியாக அமைந்தது.

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இக்காலப்பகுதியில் தொழிற்பாட்டு செயற்றிறன் மற்றும் கிரயக் கட்டுப்பாட்டில் செலான் வங்கி குறிப்பிடத்தக்கக் கவனத்தைச் செலுத்தியது. ரூ. 4,365 மில்லியனாகக் காணப்பட்ட மொத்தச் செலவிலான அதிகரிப்பை, 2016 இன் முதலாம் அரையாண்டில் ரூ. 4,676 மில்லியனுக்கு கொண்டுவந்து 7.12% ஆக கட்டுப்படுத்தியதன் மூலம் இதன் பிரதிபலன் வெளிப்படையாகவே நிரூபணமாகியுள்ளது.

2016 இன் முதலாம் அரையாண்டில் செலான் வங்கி 7.57% தேறிய கடன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள அதேநேரத்தில் ரூ. 193 பில்லியனாகக் காணப்பட்ட தேறிய முற்பணங்கள் ரூ. 208 பில்லியனாக அதிகரித்திருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .