Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, இளைஞர்களுக்காக Seylan Seylfie எனும் டிஜிட்டல் வங்கி கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. Seylan Seylfie, 18 - 26 வயதுடைய தொழிநுட்ப ஆர்வமுடைய இளைஞர்களுக்கு, புதிய அனுபவத்தை வழங்கும் முகமாக, தனித்துவ அனுகூலங்கள் உடைய கணக்காகும். இதற்காக செலான் வங்கி நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குநரான டயலொக் உடன் இணைந்து data விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு பல்வகை டிஜிட்டல் அனுகூலங்களை வழங்கவுள்ளது.
Seylan Seylfie cld, உலகில் முதன் முறையாக, வங்கியானது, தொடர்பாடல் வழங்குநருடன் இணைந்து “டிஜிட்டல் வட்டி” எனும் கருப்பொருளை முன்வைத்துள்ளது. இதன் மூலம் சேமிப்புக்கு கணக்கின் வட்டியானது, கணக்கு வைப்பாளர் விரும்பும் பட்சத்தில் நேரடியாக டயலொக் அலைபேசிகளைக் கொண்டுள்ள கணக்கு வைப்பாளர்களின் மொபைலுக்கு, தகவல் மீள் நிரப்ப மற்றும் குரல் சேவை ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். Seylan Seylfieஇன் சிப் பொருத்திய டெபிட் கார்ட் மூலம் ஷொப்பிங், உணவகம் மற்றும் விடுமுறை ஆகியவற்றுக்கான விசேட விலைக் கழிவுகள் மற்றும் அனுகூலங்களை பெறலாம்.
மேலும், கணக்கு வைப்பாளர் 21 வயதை எட்டும் போதும் பட்டப்படிப்பு அல்லது தொழில்சார் தகைமையை நிறைவு செய்யும்போது, ரூ.25,000 வரை பெறுமதியான பணப் பரிசை பெற்றுக்கொள்வார். கல்வி மற்றும் வியாபாரத்துக்கான கடன் வசதிகளையும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களில் பெறலாம். நிபந்தனைக்குட்பட்ட முறையில் இளைஞர்கள் சிறப்பான நடைமுறை கணக்கையும் காசோலை புத்தகத்தையும் பெறலாம். ரூ.15,000 நிலையான வருமானத்தைப் பெறும் கணக்கு வைப்பாளர்கள், விசேட கிரெடிட் கார்ட் வசதியையும் பெறலாம்.
30 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago