Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனசக்தி இன்ஷூரன்ஸ் பிஎல்சி நிறுவனம், தேசத்தில் அறிவு என்ற ஒளி விளக்கை ஏற்றுவதில் தொடர்ச்சியாகக் காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டின் ஒரு பகுதியாக Shishshathwayen Wishishthathwaya என்ற தனது வருடாந்த தரம் 5 புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நாடெங்கிலும் பிரதான நகரங்களில் இலவசக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாகவும் நடாத்தப்படுகின்ற இந்தப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், பிரபலமான ஆசிரியரான பாரத லங்காகே அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுவதுடன், இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச தொடர் கருத்தரங்குகள் மூலமாக அவர் தேவையான அறிவு, உபகரணங்கள் மற்றும் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வார்.
Shishshathwayen Wishishthathwaya புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பயனடைந்து கொள்ளும் வகையில் 6 கருத்தரங்குகள் கொண்டதாக இந்நிகழ்ச்சித்திட்டத்தை விஸ்தரிப்பதற்கு ஜனசக்தி இன்ஷுரன்ஸ் நிறுவனம் உதவியுள்ளது. இதன் கீழ் ஜுலை 10 அன்று கண்டியிலும், ஜுலை 17 அன்று பண்டாரவளையிலும், ஜுலை 31 அன்று குருணாகலிலும், ஆகஸ்ட் 5 அன்று கம்பஹாவிலும், ஆகஸ்ட் 8 அன்று காலியிலும், ஆகஸ்ட் 10 அன்று கொழும்பிலும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கண்டி மற்றும் பண்டாரவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகள் ஏற்கனவே இடம்பெற்று, நிறைவடைந்துள்ளதுடன், இதில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
மேலும், இந்தக் கருத்தரங்குகளில் பங்குபற்றி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்ற மாணவர்களுக்கு அவர்களின் மிகச் சிறந்த பெறுபேறுகளுக்காகவும், வளமான எதிர்காலத்திற்கு அவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்தும் முன்னெடுக்கத் தேவையான உதவிகளை வழங்கும் வகையிலும், புலமைப்பரிசில்களையும் ஜனசக்தி நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்குப் புறம்பாக, கருத்தரங்குகளில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பங்குபற்றியதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
'தொடர்ந்தும் 2 ஆவது ஆண்டாகவும் Shishshathwayen Wishishthathwaya நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை கல்வியின் மூலமாக வலுவூட்டுவதில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சிறுவர்களே எமது எதிர்கால சிற்பிகள், பொறுப்புணர்வுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், எமது தேசத்தில் கல்வியறிவு மிக்க மக்களுடன், வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வதில் பங்கு வகிக்கவேண்டியப் பொறுப்பு எமக்கு உள்ளதென நாம் நம்புகின்றோம்.
எனவே இந்த இளம் சிறுவர்கள் அனைத்து அறிவுகளையும் பெற்று, தம்மை புத்திசாலித்தனம் மிக்கவர்களாக விருத்தி செய்வதற்கு தேவையான அறிவு மற்றும் நுட்பங்களை அவர்களுக்கு வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளமையை எமக்குக் கிடைக்கப்பெற்ற கௌரவமாக நாம் கருதுகின்றோம். உள்நாட்டு பாடசாலை பாடவிதானத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரிட்சைகளுள் ஒன்றாக தரம் 5 புலமைப்பரிசில் கருதப்படுவதுடன், இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான பெறுபேறுகளை ஈட்ட எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்,' என்று ஜனசக்தி இன்ஷுரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜுட் பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிட்டார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago