Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோழி இறைச்சி தயாரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிறுவனமான டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ (பிரைவட்) லிமிடெட், டெல்மோ வர்த்தக நாமத்தின் கீழ், தனது தயாரிப்புகளை நாடு முழுவதிலும் விநியோகித்து வருகிறது. தற்போது, தனது உற்பத்தி கொள்ளளவில் பெருமளவு மெருகேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில், நவீன வசதிகள் படைத்த, குஞ்சுபொரிக்கும் நிலையத்தை நிறுவனம் அண்மையில் திறந்திருந்தது. உலகின் முன்னணி குஞ்சுபொரிக்கும் சாதனங்களான பெல்ஜியம் நாட்டின் Petersime BV இயந்திரத்தை தன்வசம் கொண்டுள்ளது. இதனூடாக ஒரு மாதத்தில் சுமார் 500,000 குஞ்சுகளைப் பொரிக்கக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. குருநாகல், குபுக்கெட பகுதியில் இந்தக் குஞ்சு பொரிப்பகம் அமைந்துள்ளது.
1988 இல் எல். ஏ. சுமித் பெரேரா என்பவரால் நிறுவப்பட்ட டெல்மோ, படிப்படியாக வளர்ச்சியடைந்து, இன்று புகழ்பெற்ற நாமமாகத் திகழ்கிறது. அண்மையில் மேற்கொண்டிருந்த மெருகேற்ற விஸ்தரிப்பு நடவடிக்கையினூடாக, தற்போது நாட்டில் காணப்படும் மாபெரும் கோழி மற்றும் விவசாய நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ பிரைவட் லிமிடெட் தலைமை அதிகாரியும், முகாமைத்துவ பணிப்பாளருமான சுமித் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “தெற்காசிய பிராந்தியத்தில், புகழ்பெற்ற நவீன கோழிக்குஞ்சு பொரிக்கும் துறையைக் கொண்ட நாடாக, இலங்கை திகழ்கிறது. புதிய குஞ்சுபொரிப்பகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது, டெல்மோ குடும்பத்தைப் பொறுத்தமட்டில், பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது. நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளதனூடாக, இந்தத் துறையில் காண்பிக்கும் தொடர்ச்சியான பங்களிப்பை உறுதி செய்துள்ளது” என்றார்.
அதன் பொயிலர் உற்பத்தி பண்ணைகள், பதப்படுத்தல் பகுதிகள் மற்றும் சாதனங்கள் போன்றன நவீன தொழில்நுட்பங்களுக்கமைய காணப்படுகின்றன. இவை சர்வதேச தரங்களுக்கமைய காணப்படுகின்றன. நிறுவனம் பெற்றுள்ள சான்றிதழ் மற்றும் தரப்படுத்தல்களான GMP, HACCP, ISO 22,000 போன்றவற்றினூடாக, இவை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஹலால் சான்றையும் பெற்றுள்ளன.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago