Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 04 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டெவிஸ்டொக் குழுமம் (டெவிஸ்டொக்), The Elovate குழுமம் என்ற பெயரில் இலங்கையிலும் தனது நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது.
அட்லஸ் லெப்ஸ், பிக்ஸல் இன்டர்நஷனல், ரெபேயா மற்றும் சேர்ஜ் குளோபல் ஆகியவற்றை உள்ளடக்கிய The Elovate குழுமமானது, சர்வதேச நிறுவனங்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து வருகிறது. அத்துடன், வன்பொருள், மென்பொருள் உட்பட பிக் டேட்டா மற்றும் சந்தைப்படுத்தலுடனான ஆய்வுகள் ஆகிய பிரிவுகளில் தொழில்நுட்பத் தீர்வுகளையும் வழங்கவிருக்கிறது.
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மய்யம் ஒன்றாகக் கருதப்படும் இலங்கை, அதிக வாய்ப்புகளையும் இளம் திறமைகளையும் கொண்ட ஒரு சிறந்த தேசமாகும். எனவே, The Elovate குழுமம் ஊடாக இலங்கையின் இளம் திறமைகளுக்குப் பெரும் வாய்ப்புக் கிடைக்கவிருக்கிறது.
இதன் மூலம் இலங்கையர்கள் பிக் டேட்டா மற்றும் ஏனைய தொழில்நுட்பப் பகுதிகளில் சிறந்த வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும்.இலங்கையில், சுமார் 18 மாதங்களுக்கு முன்னர், ஐந்து ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது, கொழும்பு முழுவதும் 150 ஊழியர்களுடன், மூன்று அலுவலகங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது.
டெவிஸ்டொக் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி திருமதி ஹேலி இவான்ஸால் வழிநடத்தப்படும் The Elovate குழுமமானது, திறமை, அனுபவம் என்பனவற்றின் மூலம் சிறந்த கலாசாரத்தை உருவாக்கி, நிறுவனத்தின் ஒவ்வொரு ஊழியருக்கும் உயர்ந்த அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
“டெவிஸ்டொக் நிறுவனத்தின் சிறந்த நடவடிக்கைகள் காரணமாக, The Elovate குழும நிறுவனமும் உலக தொழில்நுட்பத் தேவைப்பாடுகளுக்கு சிறந்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து வருகின்றது” என்று திருமதி இவான்ஸ் கூறினார்.
12 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
1 hours ago
21 Jul 2025