Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 22 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தால் இடம்பெயர்ந்து, இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வந்த 25 குடும்பங்களுக்கு நிலாவெளி, அடம்போடை பகுதியில் அமைந்துள்ள, தனது சொந்தக்காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்வந்திருந்தது.
திருகோணமலை பிரதேசத்தில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை, மீளத் தமது சொந்த வீடுகளில் குடியமர்த்துவதற்காக டோக்கியோ சீமெந்து நிறுவனம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த மாபெரும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2017 மே மாதம் 5ஆம் திகதி இடம்பெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபக் தலைவரான மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானம் அவர்களின் நினைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தால் 2009ஆம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘டோக்கியோ சீமெந்து சுனாமி வீடமைப்புத் தொகுதி’யை அண்மித்ததாக இந்த வீடமைப்புத் திட்டமும் அமைந்துள்ளது.
இதன்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு, வீடுகள் உறுதிகளுடன் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ரால் மற்றும் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ ஆகியோருடன் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
அரசாங்க அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் முகாமில் வசிக்கும் சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மத்தியில் மேற்கொண்டிருந்த மதிப்பீட்டிலிருந்து இந்த வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக குடும்பங்களைத் தெரிவு செய்திருந்தனர்.
இரா. சம்பந்தன் அங்கு உரையாற்றும்போது, “1984ஆம் ஆண்டு இந்தப் பிராந்தியத்தில் முன்னாள் ஜனாதிபதி. ஜே.ஆர். ஜெயவர்தனவால் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட போது, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஞானம் அவர்களிடம் தாம் கோரிக்கை விடுத்திருந்ததை நினைவுகூர்ந்தார். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிறுவனம் செயலாற்றி வருகின்றது” என நன்றி தெரிவித்தார்.
தேசத்தின் நலன் கருதி டோக்கியோ சீமெந்து செயலாற்றுகின்றமையைப் பாராட்டியிருந்ததுடன், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் வீடமைப்புத் திட்டங்களை நிறுவியிருந்தமையையும் வரவேற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago