Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமமான 'யூனியன் மனிதாபிமானம்' மூலமாக தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டத்தை அண்மையில் நாடு முழுவதிலும் ஆரம்பித்திருந்தது.
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்ட டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது மக்கள் மத்தியில் டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் அலுவலக ஊழியர்கள் பிரச்சார நடவடிக்கைகளை இந்தத்திட்டத்தினூடாக
முன்னெடுத்திருந்தனர்.
சகல யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைகள் மற்றும் அவற்றுக்கு பொருத்தமான பிரதேச சுகாதார அலுவலகங்கள் ஆகியன ஒன்றிணைந்து இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தன. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் உதவியுடன் விசேடமாக தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது. யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைகளை அண்மித்த 1 -2 கிலோமீற்றர் பிரதேசம் இனங்காணப்பட்டு, சுகாதார அதிகாரிகள் அடங்கிய குழு, வீடு வீடாகச் சென்று கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
யூனியன் அஷ்யூரன்ஸின் சுமார் 4000 ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள், பொதுச்சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வு செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இணைந்துக் கொண்டனர். அவர்களின் செயற்பாடுகளின் பெறுபேறாக, ஒரே நாளில் சுமார் 61 நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
'நாட்டில் தற்போது காணப்படும் நிலையைக் கவனத்தில் கொண்டு நாம் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தோம். பிரதேச சுகாதார அலுவலகங்களின் மூலமாக எமக்கு கிடைத்தப் பங்களிப்பு மற்றும் ஆதரவு மிகவும் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. எதிர்காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்' என்றார்.
கொழும்பு மாநகர சபையின், பொது சுகாதார திணைக்களத்தின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர். ருவன் விஜயமுனி கருத்துதெரிவிக்கையில், 'பல ஆண்டுகளாக யூனியன் அஷ்யுரன்ஸ் உடன் பொது சுகாதார திணைக்களம் செயலாற்றியுள்ளது. தனியார் நிறுவனம் எனும் வகையில், எமது டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு அவர்கள் பெருமளவு ஆதரவை வழங்கி வருகின்றனர். டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு மிகவும் வரவேற்கத்தக்கது' என்றார்.
37 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
5 hours ago