Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் தனது சகல வசதிகளையும் கொண்ட கிளை வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கும் வகையில், தலவதுகொட பிராந்திய அலுவலகத்தை அண்மையில் திறந்து வைத்திருந்தது. புதிய பிராந்திய அலுவலகத்தினால் நிறுவனத்தின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்புகள் எனும் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு வலுச்சேர்க்கப்படும்.
யூனியன் அஷ்யூரன்ஸின் தலவதுகொட பிராந்திய அலுவலகம் போதியளவு வாகன தரிப்பிட வசதிகளை கொண்டுள்ளதுடன், தினசரி மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5 மணி வரை திறந்திருக்கும். அலுவலக இடவசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய உள்ளக அலங்கார வடிவமைப்புகள், ஒளியூட்டல் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனூடாக ஊழியர்களுக்கு பணியாற்றுவதற்கு பொருத்தமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கான சேவை பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சி நிலையம், மேலும் பல வாடிக்கையாளர் வசதிகள் போன்றன எவ்வேளைகளிலும் வழங்கப்படும்.
மெருகேற்றம் செய்யப்பட்ட அலுவலக பகுதிகளினூடாக நிறுவனத்தில் பணியாற்றும் கலாசாரம் ஊக்குவிக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கும் வசிப்போருக்கும் சௌகரியமான சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸினால் தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு பரந்தளவு ஆயுள் காப்புறுதித் தீர்வுகள் வழங்கப்படுகின்றன.
கிளை அலுவலகம் முழுமையான தகவல் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதுடன், பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கு துரித கதியில் மற்றும் இலகுவாக சேவைகளை வழங்கக்கூடிய வகையில் மடிக் கணினிகள் மற்றும் டப்லெட்கள் போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தலவதுகொட பிராந்திய அலுவலகம் 760/M/1> பன்னிபிட்டிய வீதி, தலவதுகொட எனும் முகவரியில் அமைந்துள்ளது. நாட்டில் 30 வருட காலத்துக்கும் மேலாக மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டி, வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்புகளை ஏற்படுத்தி வரும் பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த, திறன் படைத்த நிபுணர்கள், உறுதியான மூலதன இருப்பு மற்றும் மீள் காப்புறுதி பங்காண்மைகள் போன்றன நிறுவனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமைந்திருந்தன.
வர்த்தக நாமத்தின் உறுதி மொழிகளான வாடிக்கையாளர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வெளிப்படைத்தன்மை, சௌகரியம் மற்றும் மதிப்பளிப்பு போன்றன தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago