Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள விவசாய, கால்நடை பண்ணையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி அண்மையில் நிதிக் கற்கை செயலமர்வு ஒன்றை நடத்தியது.
இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக இவ்வாறான நிதிக் கற்கை வேலைத்திட்டம் மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,000ஐ கடந்துள்ளது.
இந்தச் செயலமர்வில், சுமார் 100 விவசாயிகள் பங்குபற்றினர். விவசாயப் பிரிவைச் சேர்ந்த நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்காக இவ்வாண்டில் நடத்தப்பட்ட எட்டாவது செயலமர்வு இதுவாகும்.
காலத்துக்கு காலம் இவ்வாறான செயலமர்வுகள் நாட்டின் பல பாகங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்தச் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக, வங்கி அறிவித்துள்ளது.
நிதிக் கற்கைகள், வர்த்தக அபிவிருத்தி தொடர்பான அனுபவம் மிக்க பேச்சாளரான இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் சரத் ஏக்கநாயக்க, இந்நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டார்.
நொச்சியாகம பிரதேச செயலாளர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. உதவிப் பிரதேசச் செயலாளர் R.M.N.S ராஜகருண, கொமர்ஷல் வங்கியின் வட மத்திய பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர் மைக்கல் டி சில்வா, வங்கியின் நொச்சியாகம கிளை முகாமையாளர் திலான் வல்பிட்ட உட்பட வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு வர்த்தக பிரிவுகளைச் சேர்ந்த நுண் தொழில்முயற்சியாளர்களுக்கு வங்கி இவ்வாறான செயற்றிட்டங்களை நடத்தி வருகின்றது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago