Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 11 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொகுசான வாழ்விடங்களை அமைக்கும் தனது பயணத்தில் மற்றுமொரு அங்கமாக தனது 14ஆவது சொகுசு தொடர்மனை செயற்றிட்டத்தை, குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
இந்தத் தொடர்மனைக்கு Ocean Breeze Negombo எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிங்ஸ்பரி ஹோட்டலில் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்தத் தொடர்மனையில் தமக்குரியக் குடிமனைகளைக் கொள்வனவு செய்ய முன்வந்திருந்த முதல் 10 வாடிக்கையாளர்களுக்கு, அவர்களுக்கான உடன்படிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன், இந்நிகழ்வின் போது, குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் தலைவரான தசுன் விக்ரமரட்ன இந்தத் திட்டம் தொடர்பில் நிகழ்வுக்கு விஜயம் செய்திருந்தவர்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தார்.
இலங்கையின் அதிகளவு புகழ்பெற்ற கடற்கரையை அண்மித்து இந்தக் குடியிருப்புத்தொடர்மனை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு துரிதமாக பயணிக்கக்கூடிய தூரத்தில் அமையவுள்ளது. Ocean Breeze முதலீட்டாளர்களுக்கு வருடம் முழுவதும் வருமானத்தை ஈடுட்டிக்கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதுடன், இந்த தொடர்மனைத்தொகுதியில் அமையவுள்ள சொகுசு வசதிகள் மற்றும் அமைவிடம் போன்றன, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறையை நாடுவோருக்கு, இந்தத் தொடர்மனையில் காணப்படும் இல்லங்களை வாடகைக்கு வழங்கி, அதனூடாக வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
குளோபல் ஹவுசிங் அன்ட் ரியல் எஸ்டேட் (பிரைவட்) லிமிட்டெட் மூலமாக முன்னெடுக்கப்படும் நான்கு செயற்திட்டங்களில், Ocean Breeze என்பது, பாரியளவிலான திட்டமாக அமைந்துள்ளது. ஹோட்டல் தொடரைப் போன்று, 196 அலகுகளை கொண்டுள்ளது. 8.6 மில்லியன் ரூபாயிலிருந்து இந்தத் தொடர்மனைகள் விற்பனை செய்யப்படும்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago