2025 மே 21, புதன்கிழமை

நீர்கொழும்பு Arie Lagoon அங்குரார்ப்பணம்

Editorial   / 2018 மே 06 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு களப்புப் பகுதியில் ஐந்தரை ஏக்கர் பகுதியில் Arie Lagoon, அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், பெருமளவு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

வெலிகல ஹோல்டிங்ஸ் லிமிட்டெட், 55 அறைகளுடன், நான்கு நட்சத்திர ஹோட்டலாக இந்த புதிய Arie Lagoon ஐ அங்குரார்ப்பணம் செய்துள்ளது. நீர்கொழும்பிலுள்ள மீனவக் கிராமமான தலஹேன பகுதியில், 2017 நவொம்பர் மாதம் முதல் சிறியளவில் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த Arie Lagoon நீர்கொழும்பு, அங்குரார்ப்பணம் தொடர்பில் வெலிகல ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் பதில் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான எரங்க வெலிகல கருத்துத் தெரிவிக்கையில், “நாம் நவீன, அழகிய மற்றும் செயற்பாடுகள் நிறைந்த பகுதியைக் கட்டியெழுப்பத் திட்டமிட்டோம். Arie Lagoon அங்குரார்ப்பணத்துடன் நாம் அதை நிவர்த்தி செய்துள்ளோம் எனக் கருதுகிறேன். இலங்கையின் அனைத்துப் பாகங்களையும் சேர்ந்த விருந்தினர்கள் இங்கு விஜயம் செய்து, வாழ் நாள் முழுவதும் நினைவிலிருக்கும் ஞாபகங்களைக் கொண்டிருக்கக் கூடியதாக அமைத்துக்கொள்ள முடியும்.  பெருமளவான மக்கள் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். விடுமுறைக்கு விஜயம் செய்யும் போது, அவர்கள் முற்றிலும் ஓய்வாக இருப்பதையே விரும்புவார்கள். Arie Lagoonஇல் நாம் அனைத்து அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், இனிய ஞாபகங்களுடன் விருந்தினர்கள் திரும்பிச் செல்வதையே எதிர்பார்க்கிறோம். சிறந்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு இடவசதிகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பதுடன், அதற்கான ‘பாங்குவெட்’ வசதிகளையும் கொண்டுள்ளோம். எம்மைப்பொறுத்தமட்டில் எமது கனவு நனவாகியுள்ளதுடன், நீர்கொழும்பு Arie Lagoon க்கு விஜயம் செய்து, வித்தியாசத்தை உணருமாறு அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.   

வெலிகல ஹோல்டிங்ஸ் லிமிட்டெட், ஒரு பில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை இந்தக் ஹோட்டலை நிறுவுவதற்காக முதலீடு செய்துள்ளது. இரண்டு நீச்சல் தடாகங்களைக் கொண்டுள்ளதுடன், ஒன்று வரையறையற்ற நீச்சல் தடாகமாகவும் உள்ளது. exclusive wine lounge, British pub-style bar, இரு விசேடத்துவம் வாய்ந்த உணவகங்கள், ஆரோக்கிய ‘ஸ்பா’, ‘ஜிம்’ உட்பட இதர வசதிகள் அடங்கியுள்ளன. 
ஓய்வெடுப்பதற்குச் சிறந்த ஹோட்டல் பகுதியாக Arie Lagoon நீர்கொழும்பு திகழ்கிறது. இந்தக் ஹோட்டலில் சர்வம்சங்களும் பொருந்திய ‘பாங்குவெட்’ மாநாட்டு மண்டபமும் காணப்படுவதுடன், 300 க்கும் அதிகமான விருந்தினர்களை உள்ளடக்கவும் முடியும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .