Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் முதல் முறையாக நுளம்புக் கடியை தடுக்கும் காலுறைகளை கந்துரட்ட குழுமம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக நாடெங்கும் உள்ள பாடசாலை சிறுவர்களை இது இலக்காகக் கொண்டுள்ளது. சிறுவர்கள் பாடசாலையில் இருக்கும்போது இந்த காலுறைகள் நுளம்புகள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து அவர்களை பாதுகாக்கும்.
பாடசாலை சுற்றுச்சூழல் நுளம்புகள் மற்றும் பூச்சிகளினால் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இந்த புதிய காலுறைகள் சிறுவர்களுக்கு தேவைப்படும் மேலதிக பாதுகாப்பை கொடுக்கிறது.
டெங்கு நுளம்புகள் காலை மற்றும் மாலை வேளைகளில் தீவிரமாக செயற்படுவதோடு அவை பெரும்பாலும் தரைக்கு மிக நெருக்கமாகவே பறக்கின்றன.
இந்தப் புதிய காலுறைகள் பாடசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பாதுகாப்பு அளிக்க மிக பொருத்தமானதாக உள்ளது. நாடெங்கும் உள்ள பல பாடசாலை சிறுவர்களினதும் உயிரை காவுகொண்ட மற்றும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு நல்ல தீர்வு வழங்குவதாக இந்த உற்பத்தி இருக்கும். இந்த காலுறைகள் நுளம்பு மற்றும் உண்ணி கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் ஆரோக்கிய அமைப்புடன் உயர் தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த காலுறைகள் சாரணர் முகாம்கள், பாதுகாப்பு தரப்பினர், மலையேற்றம், கோடைகால மாலை நேரங்கள், காட்டுப் பயணங்கள் மற்றும் ஏனைய பயணங்களில் அதிகம் தேவையாக உள்ளது. இந்த காலுறைகள் நுளம்புகள், உண்ணி, குதிரை ஈக்களிடம் இருந்து பாதுகாப்புத் தருவதோடு, சில நேரங்களில் ஏற்படும் குறித்த தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும்.
இந்த காலுறை துணியான புரோலென் சில்டெக்ஸ் உயிர் மரபணு வெள்ளி அயனிகள் அடிப்படையில் ஒரு பக்டீரியா எதிர்ப்பாக மாற்றி அமைக்கப்பட்டதாகும். இது பக்டீரியா மற்றும் பூஞ்சை இருப்பை தடுப்பதோடு விரும்பத்தகாத நாற்றத்தை குறைத்து உங்களது தோலின் உயிரியல் சமநிலையை தக்கவைத்துக் கொண்டு ஆரோக்கியமான புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்.
மிருதுவாக சௌகரியமான இவை உங்களது கால்கள் அதிக காற்றோட்டத்தை பெற உதவுவதோடு பாரம்பரியமான இழுபடும் பொருட்களை விடவும் இலகுவாக இழுக்க முடியுமாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
5 hours ago