Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 03 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஸ்லே லங்கா நிறுவனம், அண்மையில் தனது தலைமை அலுவலக உத்தியோகத்தர்களுடன், அலுவலக வளாகத்தில் புத்தாண்டைக் கொண்டாடியது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷிவானி ஹெக்டே இந்நிகழ்வில் கலந்துகொண்டார். பாரம்பரிய புத்தாண்டுக் காலையுணவுடன் ஆரம்பித்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில், மங்கள விளக்கேற்றல், பால் பொங்குதல் ஆகிய சம்பிரதாயங்களுடன் பாரம்பரியமான மற்றும் பாரம்பரியமல்லாத புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
கிராமிய இல்லத்தை நினைவுபடுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்த இல்லத்தில், ஊழியர்களுக்குப் பாரம்பரிய கைவிசேடம் வழங்கப்பட்டது. முட்டி உடைத்தல், தலையணை போர், யானைக்கு கண் வைத்தல், தேங்காய் துருவும் போட்டி, தேசிக்காய் கரண்டி ஓட்டம், நெஸ்டமோல்ட் அருந்தும் போட்டி, ஊஞ்சல் ஆட்டம் அடங்கலாக பல்வேறுபட்ட புத்தாண்டுப் போட்டிகளில் பணியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.
இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் தொடர்ச்சியாக வலுவான ஓர் அங்கமாகத் திகழ்ந்து வருகின்ற தனது பிரதான வர்த்தகநாமமான ‘நெஸ்டமோல்ட்’ மூலமாக, 150 க்கும் மேற்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்களுடன், நாடெங்கிலும் பல மில்லியன் கணக்கான நுகர்வோருடன் இணைந்தும் புத்தாண்டை ‘நெஸ்லே’ சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago