2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நேஷன்ஸ் ட்ரஸ்ட்டின் வளர்ச்சிக்கு FMO உதவி

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை FMO அண்மையில் வழங்கியிருந்தது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் வர்த்தக வங்கியியல் செயற்பாடுகளின் வளர்ச்சிக்கு, இந்த கடன் உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள உதவிகளினூடாக, சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளதுடன், வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.  

இலங்கையில் காணப்படும் சிறந்த பத்து வங்கிகளில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமைந்துள்ளதுடன், நாட்டில் காணப்படும் வேகமாக வளர்ந்து வரும் வங்கியாகவும் காணப்படுகிறது.

வங்கியின் கிளை வலையமைப்பு நாடு முழுவதிலும் 100 பகுதிகளில் பரந்து காணப்படுகின்றன. இதனூடாக, நகரிலிருந்து தூரத்தே காணப்படும் பகுதிகளில் அணுகலை இது உறுதி செய்கிறது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தனது தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்காக Fintech தீர்வுகளை பின்பற்றுவது மற்றும் ஊக்குவிப்பதில் முன்னோடியாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் திகழ்கிறது.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் FMO மேற்கொண்டுள்ள முதலாவது மீள இடம்பெறும் கொடுக்கல் வாங்கலாக இது அமைந்துள்ளதுடன், எட்டு வருடங்களுக்கு முன்னதாக வங்கியின் வளர்ச்சி கொள்கைக்காக கடன் உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வங்கிக்கு தனது வியாபாரத்தை வளர்ச்சியடையச் செய்ய அவசியமான நிதிகளை பெற்றுக் கொள்வதற்கு உதவிகளை வழங்குவதற்கு மேலாக, இந்த கடனினூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு மதிப்பைப் பெற்ற நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்களான ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, அபுதாபி கொமர்ஷல் வங்கி, ஃபர்ஸ்ட் கொமர்ஷல் வங்கி (தாய்வான்) மற்றும் அட்லான்டிக் Forfaitierungs போன்றவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் வழிகோலியிருந்தது.

இவற்றில் பெருமளவான அமைப்புகள், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக்கு முதன் முறையாக கடன் உதவிகளை வழங்குகின்றன, இதனூடாக அமைவிடம், பின்புலம் மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றில் பன்முகப்படுத்தப்பட்ட நிதிச்சேவை வழங்குநர்கள் மத்தியில் வங்கி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய உறவுகளை மேலும் கட்டியெழுப்பி, தற்போதைய கடன் வசதிக்கு அப்பாலான வாய்ப்புகளை பெற்றுக் கொள்வது பற்றியும் வங்கியினால் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும்.  

இந்த கடன் வசதியுடன், FMO இனால், வணிக கடன் வழங்குநர்களுடன் தொடர்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, 5 ஆண்டு முதிர்வு கால அடிப்படையில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், FMO இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடன் வசதியில் முதல் தடவையாக இரு நிறுவனங்கள் பங்குபற்றுநர்களை அறிமுகம் செய்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X